சேமிப்பு திட்டங்கள்
வணக்கம் நண்பர்களே.! அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறார்கள். ஆனால் அந்த பணத்தை சரியான முறையில் சேமிக்க தெரியாது. பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது முக்கியமானது. உங்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் தபால் துறையின் மூன்று சேமிப்பு திட்டங்களை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
RD Scheme in Post Office in Tamil:
முதலில் பார்ப்பது RD சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டத்தை தனி சேமிப்பாகவும் தொடங்கலாம். இல்லையென்றால் ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆகவும் தொடங்கலாம். இதற்கு குறைந்தபட்சம் சேமிப்பு மாத தொகை 100 செலுத்தலாம். இந்த திட்டத்தில் 5 ஆண்டு கணக்கை முடித்து கொள்ளலாம். 5 வருடத்தில் கணக்கை முடித்தால் 5.8 % வட்டி அளிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் விருப்பபட்டால் 3 ஆண்டுகளில் கணக்கை முடித்து கொள்ளலாம். 3 ஆண்டுகளில் கணக்கை முடித்தால் வட்டி விகிதம் 4 % அளிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ தபால் துறையில் அருமையான காப்பீட்டு திட்டத்தில் மாத தொகையாக 50 ரூபாய் செலுத்தினால் போதும்.
Monthly Income Scheme Post Office in Tamil:
நீங்கள் ஒரு மொத்த தொகையை ஒரு முறை சேமிக்க வேண்டும். இதற்கான வட்டி தொகையை மாதம் மாதம் உங்களது கணக்கில் சேமித்து விடுவார்கள். இந்த சேமிப்பை தனி கணக்காக தொடங்கினால் அதிகபட்ச தொகை 4.5 இலட்சம் அதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 இலட்சம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்திற்கு மாதாந்திர வட்டி தொகையாக 6.6% அளிக்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
இந்த தேசிய சேமிப்பு சான்றிதழை தபால் துறை மூலமாக வாங்கி எடுத்துவீட்டிர்கள் என்றால் இந்த சான்றிதழை வைத்து நீங்கள் லோன் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 6.8 % அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எடுத்துக்காட்டாக 10 இலட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதற்கான வட்டி 3 இலட்சம் அளிக்கப்படுகிறது. 5 வருடம் கழித்து கணக்கை முடிக்கும் பொழுது 13 இலட்சம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ போஸ்ட் ஆபீஸ் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள்
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |