Post Office Scheme 2023
போஸ்ட் ஆபீஸ் என்பது மக்கள் பயன் அடைவதற்காக உள்ள ஒரு சேமிப்பு கூடம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன் அடையும் வகையில் நிறைய திட்டங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வங்கி மற்றும் நிதிநிறுவனகளை ஒப்பிட்டு பார்க்கும் போது போஸ்ட் ஆபீசில் அனைத்து சேமிப்பு திட்டத்திற்கும் அதிக வட்டி விகிதம்% கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றும் போஸ்ட் ஆபீஸில் உள்ள ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் வட்டி மட்டுமே 1,79,647 ரூபாய் பெறலாம். சரி வாருங்கள் இந்த திட்டத்தில் எப்படி சேருவது மற்றும் அதற்கான தகுதிகள் என்னென்ன என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 1,43,578 ரூபாய் பெறக்கூடிய திட்டம் எந்த பேங்கில் உள்ளது தெரியுமா..?
Post Office Time Deposit Scheme in Tamil:
போஸ்ட் ஆபீஸ் Time Deposit Scheme என்பது 1000 ரூபாயினை மட்டும் செலுத்தி தொடங்கும் திட்டம் ஆகும். மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதிக அளவிலான தொகையினை முதலீடு செய்து சேமிக்க தொடங்கலாம்.
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Account ஓபன் செய்யும் போது ஒரே ஒரு முறை தொகையினை செலுத்தினால் போதும்.
வயது தகுதி:
இந்த திட்டத்தில் இந்திய குடியுரிமை பெற்று 18 வயதில் இருந்து உள்ள அனைவரும் போஸ்ட் ஆபீஸில் சேமிக்க தொடங்கலாம்.
வட்டி விகிதம்%:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த Time Deposit Scheme-ற்கு வட்டி விகிதம் என்பது 4 முறையில் உள்ளது. அதுபோல நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது இருக்கும் வட்டி தொகை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் திட்டத்திற்கான முதிர்வு காலம் முடியும் வரை இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் உங்களுக்கான வட்டி விகிதம் வழங்கப்டும்.
Post Office Time Deposit Scheme 2023 | |||
1 வருடம் | 2 வருடம் | 3 வருடம் | 5 வருடம் |
6.60% | 6.80% | 6.90% | 7% |
முதிர்வு காலம்:
இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் சேருவதற்கு முன்பே உங்கள் திட்டத்திற்கான முதிர்வு காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
விதிமுறைகள்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு திடீரென்று நீங்கள் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஆனால் நீங்கள் 1 வருடம் முடிவடைவதற்குள் இந்த கணக்கை முடித்தால் உங்களுக்கு சாதரணமான போஸ்ட் ஆபீஸின் வட்டி விகிதம் படி மட்டுமே கணக்கு செய்து உங்களுக்கான தொகை வழங்கப்படும்.
இத்தகைய திட்டத்தை உங்களுடைய முதிர்வு காலம் முடிந்த மீண்டும் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.
இந்த திட்டத்தில் 5 வருட கால அளவில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு எவ்வளவு தொகை கிடைக்கும்:
Post Office Time Deposit Scheme 2023 | |||
முதலீடு தொகை | முதிர்வு காலம் | வருடாந்திர வட்டி தொகை % | மொத்த வட்டி தொகை% |
1 லட்சம் | 5 வருடம் | 7,185 ரூபாய் | 35,929 ரூபாய் |
2 லட்சம் | 5 வருடம் | 14,371 ரூபாய் | 71,858 ரூபாய் |
3 லட்சம் | 5 வருடம் | 21,557 ரூபாய் | 1,07,788 ரூபாய் |
5 லட்சம் | 5 வருடம் | 35,929 ரூபாய் | 1,79,647 ரூபாய் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |