Pradhan Mantri Matru Vandana Yojana Scheme Details
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் சேமிப்பு திட்டம், அரசு திட்டம் போன்ற திட்டங்களை பற்றி அறிந்து வருகிறோம். அதேபோல் பெண்களுக்கான ஒரு அருமையான மத்திய அரசின் திட்டத்தை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். பெண்களின் எதிர்கால பயன்பாட்டிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (PMMVY) பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் ரூ.5000 தொகையாக பெறலாம். எனவே பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் (PMMVY) விண்ணப்பிப்பது எப்படி.? யாரெல்லாம் தகுதியுடையவர்கள்.? போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (PMMVY):
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம் முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என செயல்படுத்தப்பட்டது. இது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மகப்பேறு நன்மை திட்டமாகும் . இத்திட்டம் 2010 இல் தொடங்கப்பட்டு 2017 இல் மறுபெயரிடப்பட்டது. இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்:
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தில் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கருவுற்ற பெண்கள் தகுதியானவர்கள்.
மேலும், இத்திட்டத்தில் முதல் குழந்தைக்கு மட்டுமே விண்ணப்பித்து நிதி உதவி பெற முடியும்.
இத்திட்டத்தில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். மத்திய அரசு சுமார் 13.766 ரூபாய் கோடியை பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்திற்கு செலவு செய்துள்ளது.
வழங்கப்படும் தொகை:
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவியாக 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த 5000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளில் வழங்கபடுகிறது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் 5000 ரூபாயும் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.
பெண்கள் போஸ்ட் ஆபீஸில் மாதம் 1300 ரூபாய் வட்டி பெறக்கூடிய திட்டம்
முதல் தவணை:
இத்திட்டத்தின் முதல் தவணை ஆனது, பெண்கள் கருவுற்றபோது ரூ.1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இரண்டாம் தவணை:
இரண்டாம் தவணையில் ரூ.2000 வழங்கப்டுகிறது. இத்தொகை 180 நாட்கள் கழித்து கர்ப்பகால சிகிச்சையின் போது வழங்கப்படுகிறது.
மூன்றாம் தவணை:
மூன்றாம் தவணை ஆனது குழந்தை பிறந்த பிறகு ரூ.2000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி.?
அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியான பெண்கள் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தின் கீழ் பதிவு செய்து நிதி உதவி பெறலாம்.
மேலும் https://pmmvy.nic.in/Account/Login என்ற இணையதளத்தின் மூலமாகவும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |