How Long Is The Earth in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான பதில் கிடைத்து விடும். சரி நாம் வாழும் பூமியின் நீளம் எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..? |
பூமியின் நீளம் எவ்வளவு..?
இந்த பூமியில் எத்தனை ஊர்கள், எத்தனை நாடுகள் அதுமட்டுமில்லாமல் இந்த உலகில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட்டு பார்த்தால் நம் தலையே சுற்றிவிடும். காரணம் பூமி அந்தளவிற்கு பெரியது.
நாம் வாழும் இந்த பூமி மிக பெரியது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு பெரியது என்று கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது. ஆனால் பூமி சூரியன் மற்றும் மற்ற கோள்கள் பற்றி நாம் பள்ளியில் படித்திருப்போம்.
ஆனால் அன்று படித்தது எதுவும் நம் நினைவில் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான ஓன்று தான். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். நாம் வாழும் இந்த பூமியின் நீளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? ரொம்ப யோசிக்க வேண்டாம் அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.
சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா..? |
பூமி, சூரியனில் இருந்து மூன்றாவது கிரகமாகவும் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகமாகவும் இருக்கிறது.
பூமத்திய ரேகையில் பூமியின் ஆரம் 3,963 மைல்கள் (அதாவது 6,378 கிலோமீட்டர்) என்று மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையம் (Goddard Space Flight Center ) தெரிவித்துள்ளது.
இருந்தாலும், பூமி ஒரு கோளம் அல்ல. கிரகத்தின் சுழற்சியானது பூமத்திய ரேகையில் வீங்குவதற்கு காரணமாகிறது. அதனால் பூமியின் துருவ ஆரம் 3,950 மைல்கள் அதாவது (6,356 கிமீ) – 13 மைல்கள் (22 கிமீ) வித்தியாசத்தில் இருக்கிறது. அந்த அளவீடுகளைப் பயன்படுத்தி, பூமியின் பூமத்திய ரேகை அதாவது பூமியின் சுற்றளவு சுமார் 24,901 மைல்கள் (40,075 கிலோ மீட்டர் ) ஆகும்.
சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா..? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |