பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை | Negizhi Katturai in Tamil

Advertisement

நெகிழி பயன்பாடு ஒழித்திடு கட்டுரை | Plastic Olippu Katturai in Tamil | பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை (plastic katturai in tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்த உலகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே அளவிற்கு பூமியில் சீர்கேடுகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த சுற்று சூழல் மாசடைவதற்கு மிக முக்கியமான காரணி நாம் அதிகமாக பயன்படுத்தும் நெகிழி பொருட்களின் வளர்ச்சி தான். நாம் இன்றைய கட்டுரை பதிவில் பிளாஸ்டிக்கால் இந்த உலகத்தில் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை | நெகிழி பற்றிய விழிப்புணர்வு கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
நெகிழி பயன்பாடு கட்டுரை
நெகிழி தீமைகள் கட்டுரை
பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் வழிகள்
முடிவுரை

முன்னுரை – Plastic Katturai in Tamil – நெகிழி பற்றிய கட்டுரை:

 • 1862-ம் ஆண்டு அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிளாஸ்டிக். வருடத்திற்கு 8 மில்லியன் பாலிதீன் கவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவம், வணிகம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் மக்கள் பெரும்பாலாக பயன்படுத்தும் பொருட்களில் முக்கிய பங்கு வகித்து கொண்டு இருக்கிறது.

நெகிழி பயன்பாடு கட்டுரை – பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை – Plastic Olippu Katturai in Tamil

 • பிளாஸ்டிக் மூலம் வாகன உதிரிபாகங்கள், தண்ணீர் பைகள் (Water Pocket), Water Bottle, பிளாஸ்டிக் குடங்கள், அணிகலன்கள், பல தரப்பட்ட உபகரணங்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • இந்த நெகிழியை அதிகமாக உபயோகிப்பதற்கான காரணம் இதை எடுத்து செல்வதற்கு மிக சுலபமாக இருப்பதாலும், விலை மலிவாக இருப்பதாலும் மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
 • நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் 18-ம் நூற்றாண்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெகிழி தீமைகள் கட்டுரை – Plastic Varama Sabama Tamil Katturai – Negili Katturai in Tamil:

 • என்னதான் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் அதனால் விளையும் தீமைகள் ஏராளமானது. இந்த நெகிழியை தயாரிக்கும் போது வெளிப்படும் ரசாயன கழிவுகள் நீர் நிலைகளில் கலந்து நீரை மாசுபடுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது .
 • பிளாஸ்டிக் ஒரு மக்காத குப்பைகள் இவை எளிதில் மண்ணின் வளத்தை சிதைப்பது மட்டும் இல்லாமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை தடுக்கிறது. பாலிதீன் கவர்கள் பல ஆண்டுகள் பூமியில் மக்காமல் அப்படியே இருக்கின்றன, மாறிவரும் இந்த பூமியின் வறண்ட நிலைக்கு முக்கிய காரணம் இந்த நெகிழி தான்.
 • நாம் ஹோட்டலில் வாங்கும் உணவு பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் இருப்பதால் அவை உடலுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் வழிகள் – Plastic Katturai in Tamil:

 • நாம் உண்ணும் உணவு பொருட்களை பாலிதீன் கவர்களை பயன்படுத்தாமல் வாழை இழையை பயன்படுத்தலாம், தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மண் பானை, சில்வர் பாத்திரம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
 • சந்தைக்கு செல்லும் பொழுது கூடைகள், துணி பைகள் போன்றவற்றை உபயோகிப்பது நல்லது.
 • முடிந்த வரை பாலிதீன் கவர்களை தயாரிக்காமல், உபயோகிக்காமல் இருக்கலாம் அல்லது நெகிழி பொருட்களை மீள் சுழற்சிக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு நெகிழியை பயன்படுத்தாமல் இருந்தால் பிளாஸ்டிக் மாசுக்களை தவிர்க்கலாம்.

முடிவுரை – பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை:

 • இந்த பூமி நம்முடைய தாய் போன்றது அதனை பாதுகாப்பதும், வளமை ஆக்குவதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். நம்முடைய நாட்டில் ஏரளாமான நன்மை வாய்ந்த இயற்கை பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்துவோம், பாலிதீனை ஒழிப்போம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! மாசு இல்லா உலகை படைப்போம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

 

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai
Advertisement