வாய்மையே வெல்லும் கட்டுரை | Vaimaye Vellum Katturai in Tamil

Vaimaye Vellum Katturai in Tamil

வாய்மையே வெல்லும் கட்டுரை – Vaimaye Vellum Essay in Tamil

நம் வாழ்விற்கு அவசியம் தேவைப்படும் கருத்துக்களை பல வருங்களுக்கு முன்பே திருவருள்ளுவர் திருக்குறள் மூலம் எழுதிவிட்டால். வள்ளுவர் எழுதிய ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு கருத்துள்ள அர்த்தங்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் வாய்மையே வெல்லும் என்ற திருக்குறளுக்கு கட்டுரை ஒன்று இந்த பதிவில் எழுதலாம் வாங்க.

வாய்மையே வெல்லும் கட்டுரை

  1. முன்னுரை
  2. வாய்மையின் சிறப்பு
  3. திருவள்ளுவரின் கருத்து
  4. வாய்மையே நன்மை
  5. பொய்மையின் தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை:

இன்றைய இணைய உலகில் ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுவது என்பது மிகவும் அரிதான விஷயமாக உள்ளது. அவ்வாறு பேசினால் கூட அவர்கள் யாரும் உண்மையாக பேசுவது இல்லை. இந்த உலகில் அழிந்து வரும் பழக்கவழக்கங்களில் மிகமுக்கியமானது வாய்மை என்பதும் உண்மை பேசுதல் ஆகும். அதாவது இப்போது அனைவருமே தம்முடைய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல் சாதகமாக பொய்களைக் கூறி தப்பித்து கொள்கின்றனர். உண்மை எந்தளவிற்கு கசப்பானதாக இருந்தாலும் அதுவே ஒருவருக்கு நல்ல பெயரை தேடித்தரும். எனவே உண்மை பேசுதலின் சிறப்புக்களை அறிந்து கொள்வது அவசியமாகும். இதைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வாய்மையின் சிறப்பு:

மனிதராக பிறந்த நாம் அனைவரும் மனசாட்சியோடு தான் நமது வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். மனச்சாட்சிக்கு ஏற்ப மனிதன் வாழ்வதனையே வாய்மை என்று கூறலாம். ஆகவே ஒருவர் உண்மைபேசுவதால் எந்தளவிற்கு இடர்களை சந்திக்க நேர்ந்தாலும் அதனால் கிடைக்கும் பலன்களானது அளப்பரியதாக இருக்கும்.

அன்றிலிருந்து இன்று வரை உண்மைக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுபவன் அரிச்சந்திரன். அவன் இன்று வரை மக்களால் நினைவுகூரப்படுவதற்கான காரணம் அவனது வாய்மை என்பதும் உண்மை பேசும் பண்பாகும். காலம் காலமாக உண்மை பேசுதல் உயரிய பண்பாக வலியுத்தப்பட்டு வந்துள்ளது.

ஒளவையார் அவரது நூலாகிய உலகநீதியில் “நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்” என்று குறிப்பிடுகின்றார். அதாவது எமக்கு உண்மை தெரிந்திருக்கின்றபோது அதனை மறைத்து பொய்யுரைக்கக் கூடாது என்கின்றார்.

முண்டாசுக் கவிஞனாகக் போற்றப்படும் பாரதியார் அவரது பாடல் தொகுதியில் “பொய் சொல்லக் கூடாது பாப்பா” என சிறுவர்களை பொய் பேசக்கூடாது என அறிவுறுத்துகின்றார்.

திருவள்ளுவரின் கருத்து:

வாழ்வியல் எனப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அவரது நூலில் வாய்மையுரைத்தலிற்கு தனியானதொரு அதிகாரத்தை உருவாக்கியுள்ளார். இதிலிருந்தே அவர் உண்மை பேசுதலிற்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என வரையறுக்கின்றார். அதாவது மற்றவர்களிற்கு தீங்கு தரும் சொற்களைக் கூட உரைக்காமல் இருப்பதே வாய்மை ஆகும்.

வாய்மையே வெல்லும் கட்டுரை:

உண்மை என்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் நல்ல பண்பாகும். ஆகவே ஒருவர் உண்மை பேசுவதினால் மனவலிமையையும், மனநிறைவையையும் பெற்றுத்தரும். அதுவே பொய் உரைக்கும் போது அதனை நிரூபிக்க மீண்டும் மீண்டும் பொய்யுரைக்க வேண்டி நிலை உண்டாகும்.

ஆனால் உண்மை பேசும் போது அதுபோன்று எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாது. இதனைத் தவிர நாம் யாரிடமாவது பொய்யுரைத்து அது நிரூபிக்கப்பட்டால் எம்மீது மற்றவர்களுக்குள்ள நம்பிக்கை மற்றும் சமூகத்திலுள்ள நன்மதிப்பு ஆகியற்றை இழக்க நேரிடும்.  அதன் பிறகு நாம் எவ்வளவு தான் உண்மை சொன்னாலும் அதன் யாரும் நம்பமாட்டார்கள். நாம எந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மையை மட்டும் பேசினால் அந்த உண்மையானது பல எதிர்ப்புக்களை தேடித்தந்தாலும் அதுவே நம்மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும். மேலும் நல்ல நேர்மையான உறவுகளையும், நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்ற தன்னம்பிக்கையையும் நமக்கு பெற்றுத் தரும்.

பொய்மையின் தீமைகள்:

“பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என வள்ளுவர் குறிப்படுகின்றார். ஒரு பொய்யால் மற்றவர்களிற்கு நன்மை கிடைக்கும் என்றால் அதனைத் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்கின்றார்.

ஆயிரம் பொய்யாவது சொல்லி ஒரு நல்ல காரியத்தை நடத்தி முடிக்கலாம் என பெரியவர்கள் குறிப்பிடுவர். ஆனால் நாம் கூறும் பொய்களால் அடுத்தவரிற்கு மனசங்கடமும், நம்மீதான அதிருப்தியும் தோன்றும் என்பதில் பயம் இல்லை.

பொய்யினால் மன அமைதியும் நேர்மறையான எண்ணங்களும் நம்மை விட்டு அகன்று விடும். பொய் அவமானத்தையும் தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும். எனவே பொய்யுரைத்தலை இயன்றவரை அடியோடு ஒழிப்பதே சிறப்பு.

முடிவுரை:

உண்மையின் வலிமையானது மற்றவர்களை நம்மால் ஈர்க்கும் சக்தி கொண்டது. வாய்மையுரைப்பவர்கள் சான்றோர்களாக புகழப்படுவார்.

உண்மையை பேசும்போது நாம் மற்றவர்களைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவை இல்லை. இத்தகைய சிறப்புக்களைத் தேடித்தரும் உண்மையைப் பேசி உத்தமர்களாய் வாழ்வோமாக.

நீரின்றி அமையாது உலகு கட்டுரை

 

இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Tamil Katturai