How Did Iron Come To Earth in Tamil
இரும்பில் இருந்து தான் பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இரும்பு எப்போது பூமிக்கு வந்தது..? இரும்பு எப்போது மனிதனுக்கு தெரிந்திருக்கும்..? என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி யோசித்து இருக்கும் நபர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் பூமியின் Earth Crust-யில் 5% இரும்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பூமியில் நான்காவதாக அதிகமாக இருக்க கூடிய பொருள் என்றால் அது இரும்பு தான். எனவே இரும்பு நம் பூமிக்கு எப்படி வந்தது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூமிக்கு இரும்பு எப்படி வந்ததது..?
ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம் வெடித்த பிறகு, நெபுலாகவே மாறும். இந்த நெபுலாவில் அதிகப்படியான வாயுக்கள், தூசுக்கள் போன்றவை நிறைந்து இருக்கும். இவ்வாறு உருவாகும் வாயுக்கள் மற்றும் தூசுக்கள் பலகோடி வருடங்களாக மைய ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, அதனுடைய 90% கூறுகள் சூரியனாக அதனுடைய மையத்தில் உருவாகும். மீதமுள்ள 10% கூறுகள் தான் கிரங்களாகவும் விண்கற்களாகவும் நட்சத்திரத்தை சுற்றி உருவாகும். எனவே இந்த நிகழ்வுகளின் மூலம் தான் பூமிக்கு இரும்பு வந்தது. இரும்பு என்பது நட்சத்திரத்தில் உள்ள தனிமங்களின் இணைப்பால் ஆனது. விண்கற்கள் வடிவில் ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் தீர்ந்த பிறகு சூப்பர் நோவா நட்சத்திரங்களின் பெரிய நட்சத்திர வெடிப்பின் மூலம் இரும்பு வந்தது. இரும்பு பூமியில் மட்டுமில்லாமல் சூரிய குடும்பத்தில் உள்ள பல கிரகங்களில் இரும்பு உள்ளது.இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா.? |
இரும்பு எப்படி நெபுலாவில் வந்தது..?
சூரியனை விட 10 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரம் தான் சூப்பர் நோவாவாக வெடிக்கும். இந்த நிகழ்வு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால், நட்சத்திரத்தில் Neutralization Reaction தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனை பயன்படுத்தி தான் Neutralization Reaction நடைபெறும்.இந்த நிகழ்வின் போது, நட்சத்திரத்தில் உள்ள ஹீலியம் முடிந்த பிறகு ஹைட்ரஜன் ஆனது நட்சத்திரத்தில் உள்ள அயனோடு வினைபுரிந்து ஹீட் ரியாக்சனை வெளியிடும்.
அதாவது, நட்சத்திரம் தன்னுடைய சக்தியை உருவாக்க எப்போது அயனியை பயன்படுத்துகிறதோ அப்போது நட்சத்திரம் வெடித்து சிதறி விடுகிறது. இதனால் தான் சூப்பர் நோவா வெடிப்பில் அதிகப்படியான இரும்புகள் உள்ளன.
இந்த இரும்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வெவ்வேறு கிரகங்களுடைய கோர்களாக உருவாகி இருக்கிறது.
இரும்பு எப்போது பூமிக்கு வந்தது..?
இரும்பு சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன் மனித குலத்திற்கு தெரிய வந்தது.
விண்வெளியில் சூரியனின் நிறம் என்ன தெரியுமா..? |
இரும்பின் வகைகள்:
எஃகு – இரும்பை முக்கிய பாகமாக கொண்ட ஒரு உலோகமாகும். இந்த இரும்புடன் சிறிதளவு கரிமமும் சேர்ந்து இருக்கும்.
தேனிரும்பு– எஃ கை விட குறைந்த அளவில் கரி சேர்ந்த இரும்பு கலவை ஆகும்.
வரப்பிரும்பு– இரும்பு அல்லது இரும்பு கலவையை நீர்மநிலைக்கு மாறிமாறி காய்ச்சி வார்ப்பு அல்லது அச்சுகளில் ஊற்றி திண்மநிலைக்கு குளிர்வித்து கிடைக்கும் இரும்பு ஆகும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |