How Rubber Erase Pencil Writing in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை தான் பார்க்க போகிறோம். அது என்ன தகவல் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியும் என்று நினைக்கிறன். ஏனென்றால் என்ன பதிவு என்று நீங்கள் மேல் இருப்பதை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதாவது நாம் சிறுவயதில் படிக்கும் போது பென்சில் பயன்படுத்தி இருப்போம். அப்படி பென்சில் பயன்படுத்தி இருந்தால் கூடவே ரப்பரையும் பயன்படுத்தி இருப்போம் அல்லவா..! இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் பென்சிலில் எழுதியதை ரப்பர் எப்படி அழிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரப்பர் கண்டுபிடித்தவர் யார்..?
பொதுவாக நாம் சிறுவயதில் படிக்கும் போது எழுதுவதற்கு எதை அதிகமாக பயன்படுத்தினோம் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள். சிலர் தான் பென்சில் என்று சொல்வார்கள். ஆனால் பலரும் ரப்பர் என்று தான் சொல்வார்கள்.
பென்சிலை வைத்து எழுதியவர்களை விட ரப்பரை பயன்படுத்தி எழுதியதை அழித்தவர்கள் தான் இங்கு அதிகம். சரி நீங்களும் இதுபோல ரப்பர் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறீர்களா..? அப்படி என்றால் உங்களுக்கு இந்த கேள்வி வந்திருக்க வேண்டுமே..? அதாவது ரப்பர் எப்படி பென்சிலால் எழுதியதை அழிக்கிறது என்று தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா |
இப்படி நமக்கு பயன்படும் ரப்பரை 1770 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தத்துவஞானி மற்றும் இறையியலாளர் ஜான் ப்ரீஸ்ட்லியால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆக்ஸிஜன் மற்றும் கார்பனேற்றப்பட்ட திரவத்தின் இருப்பைக் கண்டுபிடித்தார்.
அது என்னவென்று தெரியாமல் ப்ரீஸ்ட்லி அவர்கள் ரப்பரைக் கண்டுபிடித்தார். அதை அவர் “கருப்பு ஈய பென்சிலின் அடையாளத்தை காகிதத்தில் இருந்து துடைக்கும் நோக்கத்திற்காக சிறப்பாகத் தழுவிய ஒரு பொருள்“ என்று கூறினார். பின் அவர் அதற்கு “இந்தியா கம்” என்று பெயரிட்டார்.
ஆப்பிள்-ல எதுக்கு இந்த ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தெரியுமா
ரப்பர் எப்படி வேலை செய்கிறது..?
ரப்பர்களில் உள்ள உராய்வுகள் காகிதத்தில் தேய்க்கப்படுவதால், உராய்வு வெப்பத்தை உருவாக்குகிறது. இது ரப்பர் கிராஃபைட் துகள்களைப் பிடிக்கும் அளவுக்கு ஒட்டக்கூடியதாக மாற உதவுகிறது.
அதாவது நாம் பென்சில் அழிப்பான் பயன்படுத்தும் போது, அழிப்பான் மற்றும் காகிதம் இடையே உராய்வு ஏற்படுகிறது. சில ரப்பர் துகள்கள் அழிப்பான் இருந்து தேய்ப்பதால் பென்சில் எழுத்துக்களை அழிக்க உதவுகிறது.
நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |