உங்கள் AC ல் சிவப்பு லைட் எரிவது எதனால் என்று தெரியுமா ?

Advertisement

AC ல் சிவப்பு ஒளி எரிவது எதனால் 

உங்கள் வீட்டு AC-யில் சிவப்பு விளக்கு ஒளிர்வதை பார்த்ததும் உங்களுக்கு ஒரு வித பயம் ஏற்படுவது உண்மைதான். AC உங்களின் அத்தியாவசிய வீட்டு சாதனங்களில் ஒன்றாகும். அது அதன் செயல்பாட்டை நிறுத்தினால் மிகவும் வருத்தமாக இருக்கும்.

அதனை சரி செய்ய நமக்கு போதுமான தகவல்கள் இல்லை என்றாலும், AC-ல் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் இன்று நாம் நமது AC-ல்  ஏன் சிவப்பு லைட் ஒளிர்கிறது என்று முழுமையாக பார்ப்போம் வாருங்கள்.

இந்த ரெட் லைட் ஒளிர்வதற்கு சில காரணங்கள் உள்ளன அவை:

red light in ac

உங்கள் AC-ல்  ஒளிரும் பச்சை விளக்கு உங்களது AC  க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உணர்த்துகிறது. வழக்கத்திற்கு மாறாக AC-ல் red லைட் எரிந்தால் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். AC-ல் உள்ள சென்சார் தவறை கண்டறிந்து நமக்கு அதனை தெரிவிப்பதற்காக ரெட் லைட்டை ஒளிர செய்கிறது.

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

உங்கள் AC-யில் காற்றின் சுழற்சி குறைவாக இருப்பதனால் சிவப்பு லைட் ஒளிரலாம். AC-யால் காற்றை சரியாக சுழற்ற முடியவில்லை என்றால், AC  இயங்குவதில் பாதிப்பு ஏற்படும். அதனால் AC குளிர்ந்த காற்றை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும்.

காற்றின் சுழற்சி குறைவதற்கு இன்டர்னல் டிரைவ் மோட்டாரில் ஏற்படும் சிக்கலாக கூட இருக்கலாம்.

24 மணி நேரம் ஏசி ஓடுவதால் கரண்ட் பில் அதிகரிப்பா?

வெளிப்புற துவாரங்களின் தடுப்புகளில் தூசிகள் இருப்பதாலும் அல்லது கம்ப்ரெஸ்ஸோர், கன்டென்சர் சுருள், பேன் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளாலும் உங்கள் AC ல் சிவப்பு லைட் ஒளிரலாம்.

red light of ac performance

உங்கள் AC-ல் பச்சை மற்றும் சிவப்பு நிற லைட் இரண்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தால் கன்டென்சர் குழாயில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

உங்கள் சர்க்யூட் போர்டில் ஏதேனும் Tripped பிரேக்கர் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் உங்கள் AC ல் சிவப்பு லைட் ஒளிர்வதற்கு பொருத்தமான காரணமாக இருக்கும். நீங்கள் உடனே உங்கள் சர்க்யூட் போர்டில், ட்ரிப்ட் பிரேக்கர்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்தால் உங்கள் AC ல் உள்ள பிரச்சனையை சரிசெய்யலாம்.

ஏன் AC ஓடும் போது FAN போட கூடாது..

இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement