வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேனுக்கு இனிப்பு சுவை தருவது எது தெரியுமா..?

Updated On: June 10, 2023 7:46 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

What Gives Honey Its Sweet Taste in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு தேன் பிடிக்குமா..? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், ஒரு சிலருக்கும் தேனின் இனிப்பு சுவை பிடிக்கும். சிலருக்கு இனிப்பு பிடிக்காது. அதனால் தேனும் பிடிக்காது. ஆனால் தேனை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். சரி பொதுவாக நாம் அனைவருமே தேனை பார்த்திருப்போம். அதுபோல தேன் எப்படி உருவாகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் தேனுக்கு இனிப்பு சுவை தருவது எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

தேன் எப்படி உருவாகிறது..? 

தேன் எப்படி உருவாகிறது

தேன் என்பது பல தேனீக்களால் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் பிசுபிசுப்பான பொருளாகும். தேனீக் கூட்டங்களை வளர்க்க தேன் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேனீக்கள் தாவரங்களின் சர்க்கரை சுரப்புகள் அல்லது அஃபிட்களின் தேன்கூழ் போன்ற பிற பூச்சிகளின் சுரப்புகளை சேகரித்து பின்னர் சுத்திகரிப்பதன் மூலம் தேனை உற்பத்தி செய்கின்றன.

இந்த சுத்திகரிப்பு நொதி செயல்பாட்டின் மூலமாகவும், தேன் கூட்டில் சேமிக்கும் போது, ​​தேனின் சர்க்கரை அடர்த்தியாகவும் பிசுபிசுப்பாகவும் இருக்கும் வரை செறிவூட்டும் நீர் ஆவியாதல் மூலம் நடைபெறுகிறது.

தேன் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போது இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா

தேன் கூட்டிற்குள் தேன்கூடு எனப்படும் மெழுகினால் செய்யப்பட்ட அமைப்பு உள்ளது. தேன்கூடு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான அறுகோண செல்களால் ஆனது. சரி தேனை பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் தேனுக்கு இனிப்பு சுவை தருவது எது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை கீழ் பதிவில் காணலாம்.

தேனுக்கு இனிப்பு சுவை தருவது எது..? 

தேன் எப்படி உருவாகிறது

பொதுவாக தேனில் மோனோசாக்கரைடுகளான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸின் அதிக செறிவுகள் இருப்பதால் தேன் இனிப்பு சுவையாக இருக்கிறது.

அதாவது தேனில் குளுக்கோஸை விட சற்றே அதிக பிரக்டோஸ் உள்ளது. பிரக்டோஸ் குளுக்கோஸை விட இனிமையானது என்பதால், தேன் சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையை தருகிறது.

👉சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி.. இதோ சில வழிகள்

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், தேனில் 36-50% பிரக்டோஸ் மற்றும் 28-36% குளுக்கோஸ் உள்ளது. அது தான் தேனுக்கு சுவையை தருகிறது.

சரி தேனை தலையில் தடவினால் முடி நரைத்துவிடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா.. இது உண்மையா.. பொய்யா..

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now