Why Did He Write This on The Windshield of The Vehicle in Tamil
பொதுவாக நாம் அனைவருமே பைக், காரில் தான் வெளியில் செல்வோம். அப்படி நாம் செல்லும் போதும் நிறைய படங்கள் பார்த்திருப்போம். அதுவும் நிறைய வெளி கண்ணாடியின் வழியாக பார்த்திருப்போம் அல்லவா..? அப்படி நாம் பார்க்கும் போது கண்ணாடி வழியாக நிறைய பார்த்திருப்போம். ஆனால் அந்த கண்ணாடியில் இருக்கும் இதனை யாராவது பார்த்தது உண்டா..? அது என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Why Did He Write This on The Windshield of The Vehicle in Tamil:
கண்ணாடியில் சில வார்த்தைகள் எழுதியிருக்கும். இது எதுக்கு எழுதியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? Objective in Mirrors Are Closer Than They Appear என்ற வாசகம் எழுதியிருக்கும். இதற்கு பின்பு இருக்கும் கதை என்ன தெரியுமா வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!
கண்ணாடியில் நிறைய வகைகள் உள்ளது. அதாவது Concave Mirror, Plane Mirror, Convex Mirror என 3 வகையான கண்ணாடிகள் இருக்கும்.
ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று உங்களுடைய கண்பார்வை மூலம் தான் மூளை கணிக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு விமானம் மேல் பறக்கும் போது சிறிய அளவில் தெரியும். அதற்காக அது சிறியதாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. அதனை நாம் எப்படி சொல்வோம். அது மேல் பறக்கிறது அதனால் தான் அது சிறியதாக தெரிகிறது என்று சொல்வோம்.
நாம் ஒரு பொருளை பக்கத்தில் வருகிறதா அல்லது தூரத்தில் வருகிறதா அதனுடைய சைஸ் வைத்து தான் கவனிக்கிறோம்.
ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா
இப்போது Plane Mirror என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் கண்ணாடிகள். அதில் பார்க்கும் அனைத்தும் ஒரே மாதிரி வடிவத்தில் தான் இருக்கும்.
ஆனால் வாகனத்தில் இருக்கும் கண்ணாடிகள் அனைத்தும் Convex Mirror ஆகும். இது முன்னோக்கி வளைந்து இருக்கும். இதனால் Plane Mirror விட அதிகமாக இடங்களை காண்பிக்கும். அதனால் தான் இந்த கண்ணாடியை அனைத்து வாகனத்திலும் பயன்படுத்துவார்கள்.
அதிக ஏரியாக்களை இந்த கண்ணாடி காண்பிப்பதால் அது மிகவும் சிறியதாக இருக்கும். அது சிறியதாக உள்ளதால் அது தூரத்தில் வருவது என்று தவறாக கனித்துவிடக் கூடாது என்பதால் Objective in Mirrors Are Closer Than They Appear அதாவது கண்ணாடியில் பார்க்கும் அனைத்தும் தூரத்தில் வருவதில்லை பக்கத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள்.
காரில் இது எதுக்கு இருக்குனு உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |