Why Does My Skin Swell When I Get A Mosquito Bite in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி உங்கள் வீட்டுல கொசு தொல்லை இருக்கிறதா..? இதென்ன கேள்வி என்று யோசிப்பீர்கள். கொசு தொல்லை அனைத்து இடங்களிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் மட்டும் தான் இருக்கும். அதனால் தான் அப்படி கேட்டேன். சரி பெரும்பாலும் நம்மில் பலரும் கொசு கடியை வாங்கி இருப்போம். அப்படி கொசு கடித்தால் அந்த இடம் வீங்கும். ஏன் அப்படி வீங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கொசு கடித்தால் தோல் ஏன் வீங்குகிறது..?
பெரும்பாலும் நம்மில் பலரும் கொசுக்களுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல நம் அனைவருக்குமே கொசு கடித்திருக்கும். அப்படி கொசு கடிக்கும் போதோ அல்லது கடித்த சில நேரத்தில் அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும்.
சரி ஏன் இப்படி கொசு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க அதற்கான விடையை இங்கு காணலாம்.
பென்சிலில் எழுதியதை ரப்பர் எப்படி அழிக்கிறது தெரியுமா.. |
ஒரு கொசு உங்களைக் கடிக்கும்போது, அது இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப் பகுதியை அதாவது புரோபோஸ்கிஸ் என்பதை பயன்படுத்தி நம் தோலைத் துளைக்கிறது.
அப்படி கொசு நம் இரத்தத்தை உறிஞ்சும் போது, அது உமிழ்நீரை நம்முடைய தோலில் செலுத்துகிறது. இதனால் நம் உடல் உமிழ்நீருக்கு எதிர்வினையாக செயல்படுகிறது. இதன் காரணமாக தான் கொசு கடித்த இடத்தில் வீக்கம் அல்லது அரிப்பு ஏற்படுகிறது.
இது தான் கொசு கடித்தவுடன் வீக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |