Why is Ganesh Idol Immersed in Water in Tamil | விநாயகரை நீரில் கரைப்பது ஏன்
பொதுவாக விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே விநாயகர் சிலை வாங்கி வந்தோ அல்லது வீட்டிலே செய்து அதற்கு பூஜை செய்து வழிபடுவோம். அதன் பிறகு, விநாயகர் சதுர்த்தி அன்றோ அல்லது விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளோ விநாயகர் சிலையை ஆற்றிலோ குளத்திலோ அல்லது ஓடும் நீரிலோ கரைப்பது வழக்கம். ஆனால் ஏன் அப்படி கரைக்கிறார்கள் என்று நம்மில் பலபேருக்கும் தெரியாது. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
விநாயகர் சிலையை நீரில் கரைக்க காரணம் இதுதான்:
ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும். அப்படி வேகமாகவும் அதிகமாகவும் வரும் வெள்ளத்தால் ஆற்றில் உள்ள மணல் எல்லாம் அரித்து கொண்டு கடலுக்குள் சென்று விடும். எனவே ஆற்றில் மணல் இல்லாததனால், நீரை உறிஞ்சி நிலத்திற்குள் தக்கவைத்து கொள்ளாமல் போகிறது.
இதனால் அடுத்து வரும் வெயில் காலங்களில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக தான் ஆடிக்கு பிறகு வரும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆற்றில் கரைக்கிறார்கள்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், களிமண்ணிற்கு நீரை உறிஞ்சி நிலத்தில் தக்கவைத்து கொள்ளும் தன்மை கொண்டது. எனவே களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் போது அது நீரை உறிஞ்சி நிலத்தில் தக்க வைக்கிறது. இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சம் குறைகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
மற்றொரு வரலாறு கூறுவது என்ன..?
களிமண் தெய்வீக சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்ட பிறகு அதனை ஆற்றில் கரைப்பதன் மூலம் அதன் தெய்வீகத்தன்மை வெளிப்பட்டு மக்களுக்கு ஏராளமான நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விநாயகரை ஆற்றில் கரைக்கும் போது அந்த தண்ணீர் ஆவியாகி மழையாக பொழிந்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கிறது என்றும் கூறப்படுகிறது.
துக்க வீடுகளில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |