Why Is There Is Hole in The Smartphone in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா..? கேட்ட கேள்வி தப்பு என்று நினைக்கின்றேன். ஏனென்றால் நாம் வாழும் இந்த நவீன உலகில் யாரிடம் தான் ஸ்மார்ட் போன் இல்லை சொல்லுங்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் போன் வந்தபோது ஒரு சில வீடுகளில் மட்டும் தான் ஸ்மார்ட் போன் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு வீட்டில் 4 நபர்கள் வரையும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். சரி உங்கள் போனில் இந்த சிறிய ஓட்டை இருக்கிறதானு கொஞ்சம் பாருங்கள்..! அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஸ்மார்ட் போனில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது..?
இன்றைய நிலையில் உள்ளங்கையில் உலகம் என்று சொல்வதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் போன் தான். நாம் அனைவருமே காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை போனை பயன்படுத்துகிறோம்.
ஆனால் அதில் இருக்கும் இந்த சிறிய ஓட்டையை யாருமே கவனித்ததில்லை என்று நினைக்கின்றேன். சரி நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? அப்படி பார்த்திருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? எனவே அதற்கான காரணத்தை இங்கு காணலாம் வாங்க..!
நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா |
இந்த சிறிய ஓட்டை தான் பின்புற மைக்ரோஃபோன் என்று சொல்லக்கூடிய மினி மைக்ரோஃபோன் ஆகும். இது ஒரு சத்தம் ரத்துசெய்யும் மைக்ரோஃபோன் ஆகும். இது அழைப்பின் போது செயல்படுத்தப்படுகிறது.
அதாவது இந்த சிறிய ஓட்டை தான் நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். இந்த சிறிய ஓட்டை தான் நம் குரலை மறுமுனையில் பேசும் நபருக்கு தெளிவாக கேட்க உதவி செய்கிறது. மேலும் இந்த சிறிய ஓட்டையானது போன் பேசும்போது சுற்றிலும் எவ்வளவு இரைச்சல் இருந்தாலும் இந்த சத்தங்களை இந்த மைக்ரோபோன் உள்வாங்காது.
அதுபோல இந்த மைக்ரோஃபோன் என்று சொல்லக்கூடிய ஓட்டை இல்லை என்றால், போனில் உங்களிடம் பேசும் நபர், அழைப்பின் போது உங்கள் குரலைக் கேட்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனால் தான் அனைத்து ஸ்மார்ட் போனிலும் இந்த சிறிய ஓட்டை இருக்கிறது.
கேஸ் சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது தெரியுமா |