This Hole Under The Gas Cylinder in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். அப்படி என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கிறதா..? இது என்ன கேள்வி அனைவரின் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இருக்கும் தானே என்று சொல்வீர்கள்.
ஆமாம் இன்றைய நிலையில் அனைவரின் வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கிறது. சிலிண்டர் வந்த பின் தான் சமையல் மிகவும் சுலபமானதாக மாறியது. அதுபோல நாம் இன்று தெரிந்து கொள்ள போகும் பதிவும் சிலிண்டரை பற்றி தான். அதாவது சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கேஸ் சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது..?
பொதுவாக நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா..? அப்படி உற்று கவனித்திருந்தால் கேஸ் சிலிண்டருக்கு அடியில் ஓட்டை இருப்பது தெரிந்திருக்கும். அதுபோல கேஸ் சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டையை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.
அப்படி பார்த்த அனைவருக்குமே அந்த ஓட்டை ஏன் இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கும். அதற்கான பதிலை தான் இங்கு காணப்போகின்றோம்.
10 வருட கேஸ் அடுப்பையும் இப்படி சுத்தம் செய்தால் பளிச்சென்று ஆகிவிடும்
கேஸ் சிலிண்டருக்கு அடியில் ஓட்டை இருப்பதற்கு முக்கிய காரணம் தரைக்கும் சிலிண்டருக்கு இடையில் இருக்கும் காற்றோட்டம் இருப்பதற்காக தான் இந்த ஓட்டை இருக்கிறது.
அதாவது நாம் வீட்டை கழுவும் போது சிலிண்டருக்கு அடியில் தண்ணீர் சென்று தேங்கி நிற்கும். அப்போது இந்த ஓட்டையின் வழியாக காற்றோட்டம் ஏற்பட்டு அந்த தண்ணீர் விரைவாகவே காய்ந்து விடும். அதுவே இந்த ஓட்டை இல்லையென்றால் சிலிண்டருக்கு அடியில் காற்றோட்டம் இல்லாமல் தண்ணீர் வெகுநேரம் தேங்கி நிற்கும். இதனால் சிலிண்டரின் அடிப்பகுதி துருப்பிடித்து கேஸ் கசிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக தான் கேஸ் சிலிண்டருக்கு அடியில் இதுபோன்ற ஓட்டை இருக்கிறது.
பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |