கை வைக்காமல் அடி பிடித்த பாத்திரத்தை பளிச்சுன்னு ஆக்க இதை செய்யுங்க

adi piditha pathiram cleaning tips in tamil

அடி பிடித்த பாத்திரம்

பெண்கள் கஷ்டப்படுகிற ஒன்று பாத்திரம் தேய்ப்பது. அதிலும் அடி பிடித்த பாத்திரம் தேய்ப்பது ரொம்ப கஷ்டமான செயல். அடி பிடிக்க வைப்பதே பெண்கள் தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு மறந்து விடுவார்கள். அது அப்படியே அடி பிடித்து விடும். இதனை என்ன தான் கம்பி நார் பயன்படுத்தி தேய்த்தாலும் அப்படியே தான் இருக்கும். இதனை கை வைக்காமல் ஈஸியா எப்படி அடி பிடித்ததை போக வைப்பது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

அடுப்பில் உள்ள கறைகளை நீக்க இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். அந்த குறிப்பை  பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள் ⇒ பழைய கேஸ் அடுப்பை புதியது போல் மாற்றுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா..! 

அடி பிடித்த பாத்திரத்தை தேய்ப்பதற்கு டிப்ஸ்:

முதலில் அடி பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 3/4 அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் 1 தேக்கரண்டி சேர்க்கவும். குறைவான தீயிலே கொதிக்க வேண்டும்.

2 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பாத்திரம் சூடு தனிந்தவுடன் எப்பொழுதும் பாத்திரம்  தேய்ப்பது போல தேய்த்து கொள்ளுங்கள். கஷ்டமே படாமல் ஈஸியா பாத்திரத்தை தேய்க்க சூப்பர் ஐடியாவை இருக்கா..! படிப்பதோடு இல்லாமல் ட்ரை பண்ணி பாருங்க..! உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள்.

முக்கியமானது நீங்கள் அடுப்பில் பாத்திரத்தை வைக்கும் போது குறைவான தீயிலே வையுங்கள். அதோடு அடுப்பில் பாத்திரம் இருப்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் அடி பிடிக்க வைத்து விட்டால் ஒரு வேலைக்கு இரு வேலைகள் பார்க்க வேண்டியிருக்கும். பாத்திரமும் அடி பிடிக்கும் அதோடு அடுப்பும் அசிங்கமாகிவிடும். அதனால் அடுப்பில் பால் மற்றும் சாதம் வைத்தால் கவனமாக இருக்க வேண்டும். அதோடு வறுவல், பொரியல் செய்தாலும் அடுப்பை குறைவான தீயிலே வைத்து சமைக்கவும். அப்போது தான் அடி பிடிக்காது.

இட்டலி பாத்திரம் என்ன தான் செய்தாலும் அதில் உள்ள கறைகள் போகவே போகாது. அப்படிப்பட்ட இட்டலி பாத்திரம் பளபளக்க மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். இட்டலி பாத்திரம் அடி பிடித்தது நீங்கிவிடும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil