பழைய கேஸ் அடுப்பை புதியது போல் மாற்றுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா..!

Advertisement

கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக பெண்கள் தான் அதிகம் சமையல் அறையில் கஷ்டப்படுவார்கள். குறைந்த அளவு ஆண்கள் சமையல் அறையில் கஷ்டப்படுவார்கள். கஷ்டப்படுவார்கள் என்றால் கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய கஷ்டப்படுவார்கள் என்று சொல்கிறேன். கேஸ் அடுப்பு என்றால் அதனை சுற்றியும் நிறைய கறைகள் படிந்திருக்கும். அதனை எத்தனை முறை தேய்த்தாலும் அது சுத்தம் செய்தது போல் இருக்காது. அது சற்று கவலையாக இருக்கும். உங்களின் கவலையை போக்குவதற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாங்க கேஸ் அடுப்பை ஈசியாக சுத்தம் செய்வது எப்படி என்பதற்கு சூப்பரான டிப்ஸ் பார்ப்போம்.

கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி:

நம் சமையல் அறையில் சமைக்க பயன்படுத்தும் பொருட்களின் ஒன்றானது கேஸ் அடுப்பு. சமைத்து முடித்த பிறகு சமையல் அறையை மட்டும் சுத்தம் செய்வோம் அடுப்பை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம். அதற்கு முக்கிய காரணம் அலுப்பு. கேஸ் அடுப்பில் பால், அரிசி போன்ற பொருட்கள் கீழே சிந்தினால் உடனே அதனை அன்றே துடைக்க மாட்டோம். அப்புறம் அப்புறம் என்று அப்படியே விட்டுவிடுவோம்..! அது நாளடைவில் விடாப்பிடியான துருபிடிப்பது போல் மாறிவிடும். அதனை சுத்தம் செய்ய டிப்ஸ்

டிப்ஸ் -1

gas stove cleaning in tamil

முதலில் சமையல் செய்த பிறகு மேல் சிந்திருக்கும் பொருட்களை கீழ் தள்ளி விட்டோ அல்லது துடைப்பத்தை வைத்து துடைத்துக்கொள்ளவும். பால் அல்லது டீ போடும் போது கீழே தள்ளி அதனை ஈர துணி போட்டு துடைத்துக்கொள்ளவும்.

டிப்ஸ் -2

எண்ணெய் சிந்திருந்தாலும் அதையும் ஈர துணி போட்டு துடைத்துக்கொள்ளவும். பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரை எடுத்து அதில் கோலமாவு அல்லது உப்பு ஏதேனும் ஒரு பொருளை தொட்டுக்கொள்ளவும். அப்படி இல்லையென்றால் இரண்டு பொருட்களையும் சிறிது தண்ணீர் ஊற்றி அதனை தொட்டுக்கொண்டு.

டிப்ஸ் -3

gas stove cleaning in tamil

இப்போது உங்களுடைய கேஸ் ஸ்டவை ஸ்கிரப்பரை வைத்து நன்கு துடைக்கவும். துடைத்த பிறகு ஒரு காட்டன் துணி அல்லது தண்ணீர் உரியும் பொருட்களை கொண்டு துடைக்கவும்.

டிப்ஸ் -4

பின்பு அதில் வீட்டில் சாமி கும்பிடும் போது பயன்ப்படுத்துதும் திருநீறு அதாவது விபூதி எடுத்து அடுப்பின் மேல் தூவிக்கொள்ளவும். நன்கு துடைத்து பாருங்கள் எவ்வளவு வருடங்களுக்கு முன் வாங்கினாலும் பார்ப்பதற்கு புதியது போல் மின்னும். இந்த டிப்சை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சிரியமாக இருக்கும்.

தோசை கல்லில் ஓரத்தில் இருக்கும் துரு மற்றும் எண்ணையை நீக்குவதற்கு டிப்ஸ்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement