நாவிற்கு கூடுதல் சுவையை தரும் ஐயர் வீட்டு ரசப்பொடி இப்படி செய்யுங்க..!

Advertisement

Iyer Veetu Rasam Podi Seivathu Eppadi

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் கண்டிப்பாக ரசம் சாதமும் இருக்கும். ஏனென்றால் ரசம் சாதம் பெரும்பாலும் உணவினை விரைவில் செரிமானம் அடையச்செய்யும் ஒன்றாக உள்ளது. ஆகையால் இதனை கண்டிப்பாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் ரசத்தில் பூண்டு, கொத்தமல்லி, தக்காளி, பருப்பு மற்றும் மிளகு ரசம் என பல வகைகள் உள்ளது. என்ன தான் இவ்வாறு பல வகையான ரசத்தினை சாப்பிட்டாலும் கூட ஐயர் வீட்டு ரசப்பொடியை வைத்து செய்யக்கூடிய ரசத்திற்கு ஈடாகாது என்று கூறுவார்கள். ஆனால் இனி நீங்களும் ஐயர் வீட்டு ரசப்பொடியை வைத்து ரசம் வைக்கலாம். ஆகவே இன்று ரசப்பொடி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க..!

ஐயர் வீட்டு ரசப்பொடி செய்வது எப்படி..?

தேவையான பொருட்களின் பெயர் தேவைப்படும் பொருட்களின் அளவு
முழு மல்லி 75 கிராம்
சீரகம் 2 தேக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
பூண்டு 15 பல்
காய்ந்த மிளகாய் 15
கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி

ரசப்பொடி செய்முறை:

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு பருப்பு வகைகள், அஞ்சறை பெட்டி பொருட்கள் மற்றும் மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை என இவ்வாறு தனித்தனியாக வறுத்து அனைத்தினையும் ஒன்றாக கலந்து நன்றாக ஆற வைய்யுங்கள்.

பின்பு ஆறிய பொருளை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்தால் போதும் ரசம் வைக்க அதுவும் ஐயர் வீட்டு ரசம் வைக்க ரசப்பொடி தயார்.

iyer veetu idli podi seivathu eppadi

கோவில் புளியோதரை சுவையில் இனி வீட்டிலே செய்ய பொடி இப்படி செஞ்ச போதும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement