ஐயர் வீட்டு சாம்பார் பொடி செய்வது எப்படி.?
இட்லி சாம்பாராக இருந்தாலும் சரி, சாதம் வைக்கும் சாம்பாராக இருந்தாலும் சரி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாம்பாரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைத்தாலும் அதனுடைய ருசி வித்தியாசமாக தான் இருக்கும். சாம்பார் பொடி கடையில் வாங்கி வந்து தான் வைப்பார்கள். கடையில் வாங்கி பயன்படுத்தும் சாம்பார் பொடியானது ரசாயன பொருட்கள் கலந்திருப்பார்கள். அதனால் வீட்டில் தயாரித்து வைக்கும் சாம்பார் பொடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஐயர் வீட்டில் செய்வது எல்லாமே நன்றாக இருக்கும். அதனால் இந்த பதிவில் ஐயர் வீட்டு சாம்பார் பொடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஐயர் வீட்டு சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
ஐயர் வீட்டு சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள் | ஐயர் வீட்டு சாம்பார் பொடி செய்முறை |
மல்லி- 1/4 கிலோ | முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடு வந்ததும் அதில் மல்லி சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக சிவந்த நிறம் வந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். |
பருப்பு- 40 கிராம் | அடுத்து அதே கடையில் துவர பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். |
கடலை பருப்பு- 65 கிராம் | வதக்கி கொண்டே இருக்கும் போது வெந்தயம் சேர்த்து வதக்க வேண்டும். |
வெந்தயம்- 1 ஸ்பூன் | முக்கியமாக சிவந்த நிறம் தான் வர வேண்டும், எனவே கருக விட்ருதீங்க. |
சீரகம்-40 கிராம் | அடுத்து சீரகம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். |
மிளகு- 30 கிராம் | அடுத்து பெருங்காயத்தை 1 கட்டி எடுத்து பொரிக்க விட்டு தனியாக எடுத்து கொள்ளவும். |
கருவேப்பிலை- 2 கொத்து | அடுத்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். |
காய்ந்த மிளகாய்- 1/4 கிலோ | நீஙகள் வதக்கிற பொருட்கள் அனைத்தையும் குறைந்த தீயிலே வைத்து வதக்க வேண்டும். வதக்கிய பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். |
பெருங்காயம்- 1 கட்டி | வதக்கிய பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனை காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்திருந்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும் |
கோவில் புளியோதரை சுவையில் இனி வீட்டிலே செய்ய பொடி இப்படி செஞ்ச போதும்.
கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |