கண்ணை சுற்றி உள்ள கருவளையம் ஒரே நாளில் மறைய இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Karuvalayam Maraiya Tips in Tamil

இன்றைய நிலையில் ஆண் மற்றும் பெண் இருவருக்குமே இருக்க கூடிய பிரச்சனை தான் இது. ஆண் பெண் இருவருமே தன் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் போன்றவை வர கூடாது என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

அதனால் முகத்தில் மேலும் பாதிப்பு வருகிறது. அதுபோல கருவளையம் வர முக்கிய காரணமாக இருப்பது அதிக வேலை, சரியாக தூங்காமல் இருப்பது தான். அந்த வகையில் இயற்கையான முறையில் கருவளையத்தை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

கருவளையம் மறைய எளிய டிப்ஸ்: 

டிப்ஸ் -1: 

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் மிக்சி ஜாரில் வைத்து நன்கு மைபோல அரைக்க வேண்டும். அந்த சாறை நன்கு சக்கை இல்லாமல் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அந்த சாறை ஒரு காட்டன் துணியில் நனைத்து, அந்த துணியால் கண்களைச் சுற்றி தடவ வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் விரைவில் மறைந்து விடும்.

அதுபோல இந்த சாறை கழுத்தில் இருக்கும் கருமை நீங்க, கை கால் முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க பயன்படுத்தலாம்.

மேலும் முகத்திற்கு அழகு சேர்க்க ⇒ ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ் 

டிப்ஸ் -2: 

பாதாம்

பாதாம் சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்து கொள்ளுங்கள். அடுத்து அதை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் வரை வைத்திருந்து முகத்தை கழுவங்கள். இதுபோல வாரம் 1 முறை செய்து வருவதால் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறையும்.

டிப்ஸ் -3:  

தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, ரோஸ் வாட்டர்

தினமும் குளிப்பதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒரு பஞ்சில் தொட்டு கருவளையம் இருக்கும் இடத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் கண் கருவளையம் முழுமையாக மறையும். மறையும்.

அதுபோல ரோஸ் வாட்டரை குளித்து விட்டு வந்த பிறகு ஒரு காட்டன் துணியில் நனைத்து 15 நிமிடங்கள் கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து எடுத்தால் கருவளையம் மறைய தொடங்கும்.

மேலும், எலுமிச்சை சாறையும் ஒரு காட்டன் துணியில் நனைத்து அந்த துணியால் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்வதால் கருவளையம் மறையும்.

கருவளையம் மறைய ஈசியான வழிகள்..!

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement