இந்த கிச்சன் Trick மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி..!

Advertisement

கிச்சன் டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு அருமையான கிச்சன் டிப்ஸை தெரிந்துகொள்ளப்போகிறோம். ஒரு பொருளை நீண்ட பயன்படுத்துவதற்கு ஒரு ஐடியா இருக்கும். ஆனால் அந்த ஐடியா யாருக்கும் தெரியாது. இன்றைய பதிவில் அதற்கான ஐடியா தான் சொல்ல போகிறோம். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

கண்ணாடி பாட்டில்:

கண்ணாடி பாட்டில்

வீட்டில் கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்வது கஷ்டமான வேலையாக இருக்கும். அதுவும் கண்ணாடி பாட்டிலில் பெரும்பாலானவர்கள் எண்ணையை தான் ஊற்றி வைத்துருப்பார்கள். இந்த எண்ணெய் ஊற்றி வைத்த பாட்டிலை ஒரு நிமிடத்தில் நீக்கி விடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்வோம். கண்ணாடி பாட்டிலில் உள் பகுதியில் துணி துவைக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் எதாவது ஒன்றை கண்ணாடி பாட்டிலில் போட்டு வெந்நீரை ஊற்றுங்கள். பின் பாட்டிலை ஒரு முறை நன்றாக குலுக்குங்கள்.  பிறகு தண்ணீரை ஊற்றி விட்டு எப்பொழுதும் பாத்திரம் விளக்குவது போல் வளக்கி விடுங்கள். இப்பொழுது பாருங்கள் எண்ணெய் பசை நீங்கி பாட்டில் புதிது போல தோற்றமளிக்கும்.

முகம் பார்க்கும் கண்ணாடி பளபளக்க:

முகம் பார்க்கும் கண்ணாடி பளபளக்க

வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி, பீரோ கண்ணாடி, பாத்ரூம் கண்ணாடி போன்றவை வாங்கிய கொஞ்சம் நாட்கள் நன்றாக இருக்கும். சிறிது நாட்கள் கழித்து பார்த்தால் அதில் தூசி அடைந்து முகம் சரியாக தெரியாது. இதற்கு நாம் என்ன தான் துணி வைத்து துடைத்தாலும் சரியாக இருக்காது. துடைத்த இடம் திட்டு திட்டாக இருக்கும். அதற்கு வீட்டில் பயன்படுத்தும் சானிடைசரை ஒரு துணியில் தொட்டு கண்ணாடியை துடைத்தால் கண்ணாடி புதிது போல மாறி விடும்.

கேஸ் லைட்டர் ரிப்பேர்:

கேஸ் லைட்டர் ரிப்பேர்

நாம் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் லைட்டர் என்ன தான் விலை உயர்வாக வாங்கினாலும் கொஞ்ச நாட்களிலே ரிப்பேர் ஆகிவிடும். இது எதனால் சீக்கிரம் ரிப்பேர் ஆகிறது என்றால் நீங்கள் லைட்டரை பயன்படுத்திவிட்டு கேஸ் அருகிலே தான் வைத்திருப்பீர்கள். அதனால் எண்ணெய் பசை லைட்டரில் தங்கி விடும். இதனால் அந்த லைட்டரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் லைட்டெரிலுருந்து நெருப்பு வராது. அதற்கு காதுகளில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு பயன்படுத்தும் பட்ஸை பயன்படுத்தி லைட்டரை உள் பகுதியை சுத்தப்படுத்துங்கள்.

ஊறுகாய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:

ஊறுகாய் வெயில் காலத்தில் நன்றாக இருக்கும். அணல் மழைகாலத்தில் சீக்கிரம் ஊறுகாய் கெட்டு போகும். அதற்கு ஒன்று ஊறுகாயை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். அதில் எண்ணெய் பசை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றொன்று ஊறுகாயை வெயிலில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

சமையலறையில் உள்ள வெள்ளை கறை படிந்த உப்பு கறைகளை இப்படி நீக்குங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement