இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

Advertisement

இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இல்லத்தரசிகள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான 5 டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த பதிவு சமைக்கும் தாய்மார்களுக்கு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 5 டிப்ஸ்கள் மட்டும் தெரிந்தால் உங்களுக்கு கஷ்டமே இருக்காது. தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்த டிப்ஸ் தெரிஞ்சா நீங்கள் தான் சமையல் ராணி 

கிச்சன் டிப்ட்ஸ் | Kitchen Tips in Tamil:

டிப்ஸ்- 1

காலையில் முதலில் பால் காய்ச்சுவது வழக்கமான ஒன்று. அப்படி நீங்கள் பால் காய்ச்சும் போது பால் பொங்கி கீழே ஊற்றாமல் இருக்க வேண்டும் என்றால் பால் காய்ச்சும் பாத்திரத்திற்கு உள்ளே ஒரு டமராவை வைத்து விடுங்கள்.

அதன் பின்பு பால் மற்றும் தண்ணீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி காய்த்து விடுங்கள். இது மாதிரி செய்யும்போது பால் பொங்கி கீழே ஊற்றாது வேலையும் உங்களுக்கு சுலபமாக ஆகிவிடும்.

டிப்ஸ்- 2

அடுத்ததாக குக்கரில் பருப்பு அல்லது சாதம் வைக்கும் போது சில நேரத்தில் அடைத்து கொண்டு வெடிப்பது போல் இருக்கும். அதனால் இனிமேல் நீங்கள் குக்கரில் பருப்பு அல்லது சாதம் வைக்கும் போது தேவையான அளவு ஊற்றி அதனுடன் 1 ஸ்பூனை போட்டு விடுங்கள். இது மாதிரி செய்யும் போது பருப்பு வெந்த பிறகு தண்ணீர் கசியாது. குக்கரில் பருப்பும் அடைத்து கொள்ளாது. (குறிப்பு:கடைசியாக அந்த ஸ்பூனை வெளியே எடுத்து விடுங்கள்)

டிப்ஸ்- 3

நீங்கள் சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் எப்போதும் போல சப்பாத்தி மாவு, தேவையான அளவு தண்ணீர், உப்பு இந்த அனைத்தையும் போட்டு அதை 1 ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு அப்படியே மூடி வைத்து விட்டு 1 மணி நேரம் களித்து அந்த மாவை பிசைந்தால் மாவு கையில் ஒட்டாது. சப்பாத்தி மாவு பிசையவும் ஈசியாக இருக்கும்.

20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்

 

டிப்ஸ்- 4

வீட்டில் அகல் விளக்கு ஏற்றும்போது எண்ணெய் தரையில் கசிந்து கறை படிந்து விடும். அதனால் நீங்கள் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பகுதியில் நெயில் பாலீஷை தடவி காய வைத்து விடுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றினால் எண்ணெய் தரையில் கசியாது. உங்களுக்கு தரையை சுத்தம் செய்ய வேண்டிருக்காது.

டிப்ஸ்- 5

முட்டை குழம்பு சமைக்கும் போது ஒரு சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்காது. அதனால் நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி செய்து கொடுப்பீர்கள். அது மாதிரி செய்யாமல் இருக்க. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளுங்கள்.

அதன் பின்பு மசாலா பொருட்கள், உப்பு சேர்த்து இட்லி போல் ஊற்றி வேக வைத்து விடுங்கள். முட்டை வெந்த பிறகு அதை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி குழம்பு வைத்தால் அனைவருக்கும் பிடித்த மாதிரி முட்டை குழம்பு தயார். முட்டையை வீணாக்காமல் சாப்பிடுவார்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement