Kothamalli Kedamal Iruka Enna Seiya Vendum
நாம் காய்கறிகள் வாங்கும் போது எதை வாங்கினாலும் வாங்க விட்டாலும் கண்டிப்பாக கறிவேப்பிலை, புதினை மற்றும் கொத்த மல்லி என இவற்றை எல்லாம் வாங்குவோம். ஏனென்றால் நாம் சாதாரணமாக ஒரு ரசம் வைத்தால் கூட இதனை தான் பயன்படுத்துவோம். அந்த வகையில் நாம் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா என இவற்றை எல்லாம் அதிகமாக நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இவை எல்லாம் வீணாகிவிடும். அதேபோல் இந்த பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. இத்தகைய பிரச்சனையினை எண்ணி பிரிட்ஜ் இருக்கும் வீட்டில் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் வைத்து விடுவார்கள். பிரிட்ஜ் இல்லாதவர்கள் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். ஆகையால் இன்று நீண்ட நாட்கள் வரை கொத்தமல்லி கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீண்ட நாட்கள் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க:
குறிப்பு- 1
முதலில் வாங்கி வைத்து இருக்கும் கொத்தமல்லி இலையின் வேர் பகுதியினை நறுக்கி விடுங்கள். பின்பு அதில் ஏதேனும் அழுகிய இலைகள் இருந்தாலும் அதனையும் நீக்கி விடுங்கள்.
கொத்தமல்லி மாதக்கணக்கில் கெட்டு போகாமல் பிரசா இருக்க தண்ணீர் மட்டும் போதும்..
இப்போது ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூளினை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை அதில் சேர்த்து 2 நிமிடம் ஊற வைய்யுங்கள்.
2 நிமிடம் கழித்து தண்ணீரில் உள்ள கொத்தமல்லி இலையை நன்றாக காய விட்டு பின்பு இதனை எடுத்துவைத்து பேப்பர் டவலில் வைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வது மூலம் கொத்தமல்லி நீண்ட நாட்கள் வரை வீணாகாமல் இருக்கும்.
குறிப்பு- 2
நீங்கள் வாங்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களை முதலில் நீக்கி விடுங்கள். அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
அடுத்தப்படியாக தண்ணீர் சேர்த்த அந்த பாத்திரத்தில் நறுக்கிய கொத்தமல்லி இலையினை வைத்து காற்று ஓற்றமாக அப்படியே வைத்து விடுங்கள். இத்தகைய முறையினை செய்வதன் மூலம் கொத்தமல்லி இலை வீணாகாமல் அப்படியே இருக்கும்.
வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |