விடாப்பிடியான கறையை போக்க
மக்கள் அனைவருக்கும் ஆடைகள் வாங்குவது எப்போதும் மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் வாங்கும் ஆடைகள் பளிச் நிறத்தில் வாங்கி பயன்படுத்தினால் ஒரு முறை துவைத்த பின்னர் அதன் நிறம் குறைய ஆரம்பித்துவிடும். இது நமக்கு மன வருத்தத்தை வழங்கும். நம்மில் அதிக நபர்களுக்கு வெள்ளை நிற உடைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை பயன்படுத்த நமக்கு எப்போதும் தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் அவற்றில் கறைகள் ஏற்பட்டால் இதில் அதன் நிறம் மாறிவிடும். மற்ற ஆடைகள் உடன் சலவை செய்யும் போது வெள்ளை நிற ஆடையின் நிறம் மாறிவிடும். இந்த பிரச்சனைகளால் நாம் வெள்ளை ஆடைகள் மீது விருப்பம் இருந்தாலும் அதனை வாங்க மாட்டோம். இப்படி பல பிரச்சனைகள் துணிகளை சலவை செய்யும் போது ஏற்படும்அந்த பிரச்சனைகளுக்கலாம் தீர்வாகத்தான் இந்த பதிவு, உங்கள் ஆடையின் நிறம் மாறாமல் அதனை எவ்வாறு சலவை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துணிகளில் உள்ள கறையை ஒரே சலவையில் நீக்க:
நீங்கள் தின பயன்பாட்டிற்கு உடுத்தும் உடைகள் மிக சீக்கிரமாகவே நிறம் மாற ஆரம்பித்துவிடும். அதனை நாள் முழுவதும் அணிந்திருப்பதால் கரைகளும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஏற்படும் கறைகளை நீங்கள் தினமும் துவைப்பதால் துணியின் தன்மையும் நிறமும் மாற வாய்ப்புள்ளது. துணிகளில் ஏற்படும் கறைகளை உடனே சரி செய்யவில்லை என்றால் துணியின் தன்மையும் பாதிக்கும்.
துணிகளை எப்போதும் குளிர்ந்த நீரில் சலவை செய்வது நல்லது. உங்களின் ஆடைகளின் தரத்தை பொறுத்து நீங்கள் பயன்படுத்தும் சலவை தூளை தேர்தெடுக்க வேண்டும்.
உங்கள் ஆடைக்கு அதிக சோப்புகளை பயன்படுத்தினால் ஆடைகளின் தரம் மாற வாய்ப்புள்ளது. அதனால் துணிகளுக்கு சோப்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
வெள்ளை வினிகர் உங்கள் ஆடைகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்கி விடும். இவை ஆடைகளில் வீசும் நாற்றத்தை குறைக்கவும் கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்க உதவும்.
சூரிய ஒளி:
வெள்ளை ஆடைகளின் பளிச் நிறத்திற்கு சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவும், வினிகரும் சாய கறை படிந்த துணிகளின் கரையை எளிமையாக நீக்கிவிடும்.
முதலில் ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் வினீகரையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் சாய கறை படிந்த துணிகளை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் கறை உள்ள இடத்தில் தேய்த்து கசக்கினால் அனைத்து சாய கரைகளும் நீங்கிவிடும்.
துணிமணிகளில் இருக்கும் விடாபடியான எண்ணெய் கறை நீக்குவதற்கு, எலுமிச்சை சாற்றை அந்த எண்ணெய் கறை மீது தேய்த்த பின்னர் சலவை செய்தல் கறைகள் நீங்கிவிடும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |