வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களும் பளபளக்க இந்த 1 பவுடர் போதும்..!

how to clean pithalai vessels in tamil

பாத்திரம் கழுவுதல்

ஹாய் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவானது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும். வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது இவை எல்லாத்தையும் விட பாத்திரங்கள் கழுவுதல் தான் மிகவும் கடினமான ஒன்று. இனி உங்களுக்கு கவலையே இல்லை. ஏனென்றால் செம்பு, பித்தளை, எவர் சில்வர் பாத்திரம், பீங்கான் என இந்த அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே இருக்கும் இந்த ஒரே ஒரு பவுடர் மட்டும் போதும். அது என்ன பவுடர் என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வெள்ளி நகைகளை புதுசாக மாற்ற சிறந்த டிப்ஸ் இதோ..!

பாத்திரம் கழுவும் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு- 1 கப் 
  • கல் உப்பு- 1/4 கப் 
  • துணி துவைக்கும் பவுடர்- 1/4 கப் 
  • ஆப்ப சோடா மாவு- 1/4 கப் 

பாத்திரம் கழுவும் பவுடர் தயாரிப்பது எப்படி?

மேலே கொடுக்கபட்டுள்ள 4 பொருட்களையும் தண்ணீர் இல்லாத மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக அரைப்பட்டவுடன் நமக்கு பாத்திரம் கழுவுவதற்கு தேவையான பவுடர் கிடைத்துவிடும். அந்த பவுடரை எப்படி உபயோகப்படுத்துவது என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பாத்திரம் விளக்குதல்:

how to clean silver vessels in tamil_magic.jpg

 

ஒரு சிறிய பாத்திரத்தில் தயார் செய்த பவுடரை எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பித்தளை பாத்திரம், செம்பு, எவர் சில்வர் இது போன்ற எந்த பாத்திரமாக இருந்தாலும் தயார் செய்த பவுடரை தொட்டு பாத்திரம் விளக்கினால் போதும். உங்களுக்கு கை வலியும் இருக்காது பாத்திரமும் புதியது போல 2 நிமிடத்தில் பளபளக்கும்.

சிங்க் கழுவுதல்:

how to clean sink in tamil

அதேபோல வீட்டில் பாத்திரம் கழுவும் சிங்க் சுத்தம் செய்வதற்கு கஷ்டமாக இருந்தால் இந்த பவுடரை சிங்க் மேலே தூவி விட்டு ஒரு நாரை எடுத்துக்கொண்டு நன்றாக தேய்த்தால் போதும் உங்கள் வீட்டு சிங்கிள் இருக்கும் கொழ கொழப்பு தன்மை நீங்கி சிங்க் பளிச்சென்று ஆகிவிடும். இது மாறி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் சிங்க் கழுவுவதற்கு இனி கஷடப்பட வேண்டாம்.

பூஜை சாமான்கள் சுத்தம் செய்தல்:

how to wash pithalai pathiram in tamil

உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் ஜாமான்களை இந்த பவுடரை வைத்து எளிய முறையில் சுத்தம் செய்யலாம். கை வலி இல்லமால் பாத்திரத்தில் எண்ணெய் பிசு பிசுப்பு போகவும் இந்த பவுடரை நீங்கள் உபயோகபடுத்தலாம். பூஜை ஜாமான்கள் எதுவாக இருந்தாலும் தயார் செய்த பவுடரை ஒரு நாரில் தொட்டு வழக்கம் போல் விலக்குங்கள் உங்களுக்கு கஷ்டமே தெரியாது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com