ஆடைகளில் உள்ள கறைகளை போக்க
மக்கள் அனைவருக்கும் ஆடைகள் வாங்குவது எப்போதும் மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் வாங்கும் ஆடைகள் பளிச் நிறத்தில் வாங்கி பயன்படுத்தினால் ஒரு முறை துவைத்த பின்னர் அதன் நிறம் குறைய ஆரம்பித்துவிடும். இது நமக்கு மன வருத்தத்தை வழங்கும். நம்மில் அதிக நபர்களுக்கு வெள்ளை நிற உடைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை பயன்படுத்த நமக்கு எப்போதும் தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் அவற்றில் கறைகள் ஏற்பட்டால் இதில் அதன் நிறம் மாறிவிடும்.
மற்ற ஆடைகள் உடன் சலவை செய்யும் போது வெள்ளை நிற ஆடையின் நிறம் மாறிவிடும். இந்த பிரச்சனைகளால் நாம் வெள்ளை ஆடைகள் மீது விருப்பம் இருந்தாலும் அதனை வாங்க மாட்டோம். இப்படி பல பிரச்சனைகள் துணிகளை சலவை செய்யும் போது ஏற்படும்அந்த பிரச்சனைகளுக்கலாம் தீர்வாகத்தான் இந்த பதிவு, உங்கள் ஆடையின் நிறம் மாறாமல் அதனை எவ்வாறு சலவை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆடையில் உள்ள விடாப்பிடி எண்ணெய் கறை நீங்க:
Remove tough oil stains from clothes in tamil
புதிய ஆடைகல் வாங்கும் போது நாம் அதிக அதிக அக்கறை காட்டுவோம். அதுவும் வெள்ளை நிற ஆடைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உடையாக இருக்குக்கும்.
ஆனால் அந்த வெள்ளை உடைகளில் ஏற்படும் கறைகள் நமக்கு அதிக வேலை கொடுக்கும். அதுமட்டும் அல்லாமல் துணிகளில் ஏற்படும் எண்ணெய் கறைகளை நீக்குவது கடினம்.
அப்படி துணிகளில் எதிர்பாராமல் ஏற்படும் எண்ணெய் கறைகளை நீக்குவதற்கு சின்ன குறிப்பு உங்களுக்காக.
எண்ணெய் கறையை நீக்க:
துணிகளால் எண்ணெய் கறை ஏற்பட்டுள்ள இடத்தில், நீங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் talcum பவுடரை நன்றாக அதன் மேல் தேய்க்கவும்.
அல்லது உங்கள் வீட்டில் சோள மாவு இருந்தால் அதனை கறைபட்ட இடத்தில் பரப்பிக்கொள்ளவும். பின்னர் அதனை சிறிது நேரம் வரை காய விடவும். பின்னர் வினிகர் சலவை தூள் சேர்த்த கலவையில் அந்த துணிகளை 10 நிமிடம் ஊறவைத்து துவைத்தால் உங்கள் துணியில் உள்ள எண்ணெய் கறை நிமிடத்தில் நீங்கிவிடும்.
விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |