Iyengar Ven Pongal Recipe
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் அனைவர்க்கும் பிடித்த வெண்பொங்கலை ஐயர் வீட்டு பக்குவத்தில் எப்படி செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் என்னதான் வீட்டில் வெண்பொங்கல் செய்து சாப்பிட்டாலும் அது கோவிலில் கொடுக்கும் அதாவது ஐயர் வீட்டு பக்குவம் போல் வராது. வெண் பொங்கல் மட்டுமில்ல அனைத்து வகையான சைவ உணவுகளுமே ஐயங்கார் வீடுகளில் சுவையாக தான் இருக்கும். எனவே, அவர்கள் சமைக்கக்கூடிய ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான வெண் பொங்கல் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Ven Pongal Recipe Iyengar Style in Tamil:
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1 கப்
- பாசி பருப்பு – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 5 ஸ்பூன்
- துருவிய இஞ்சி – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- மிளகு – 1 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கருவேப்பிலை – 2 கொத்து
மணமணக்கும் சுவையில் ஐயர் வீட்டு புளியோதரை பொடி செய்வது எப்படி.?
ஐயர் வீட்டு வெண் பொங்கல் செய்வது எப்படி.?
ஸ்டேப் -1
முதலில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை நன்கு அலசி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அதன் பிறகு, குக்கரில் 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அலசி வைத்துள்ள பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து விடுங்கள்.
ஸ்டேப் -4
பிறகு, 4 விசில் வரும்வரை நன்கு வேகவைத்து இறக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
இப்போது, அடுப்பில் ஒரு தாளிப்பு பாத்திரத்தை வைத்து அதில் 4 ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து உருக விடுங்கள். அடுத்து இதனுடன் 1/2 ஸ்பூன் மிளகு மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -6
பிறகு, இதனுடன் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் 1 பச்சைமிளகாய் மற்றும் 15 முந்திரி பருப்பு சேர்த்து நன்கு சிவரும் வரை வதக்குங்கள்.
ஸ்டேப் -7
இறுதியாக கருவேப்பிலை சேர்த்து தாளிப்பை, தயார் செய்து வைத்துள்ள வெண்பொங்கலில் ஊற்றி நன்கு கிளறி விடுங்கள்.
அவ்வளவுதாங்க.. சுவையான மணமணக்கும் ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்..!
ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடியின் ரகசியம் இதுதான்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |