Dharmapuri District Tourist Places in Tamil
ஹாய் நண்பர்களே..! நம்மில் பலருக்கும் சுற்றுலா செல்வது என்றால் மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்காக இருக்கும். அப்படி உங்களுக்கும் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் தர்மபுரி மாவட்டம் ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக இருக்கிறது. கனிமவளங்கள் நிறைந்த தர்மபுரி மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன.
அவற்றில் சிலவற்றை இன்றைய பதிவில் காணலாம். இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் அந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று பாருங்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Dharmapuri Tourist Places in Tamil:
பொதுவாக தர்மபுரி மாவட்டம் 37% காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த காடுகளில் யானை,புள்ளிமான்கள் போன்ற பலவிலங்குகள் உள்ளது. இப்படி இயற்கை சூழலுடன் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
1. அதியமான் கோட்டை:
நாம் முதலில் பார்க்க இருப்பது அதியமான் கோட்டை பற்றி தான். இந்த அதியமான் கோட்டை தர்மபுரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோட்டை கி.பி 12 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் மன்னர் அதியமான் வாழ்ந்த கோட்டையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த அதியமான் கோட்டைக்கு அருகில் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளது. இவ்விரண்டு கோவில்களும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கவை ஆகும்.
தர்மபுரியில் சுற்றிப்பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா ஸ்தலமாக இந்த அதியமான் கோட்டை உள்ளது. அதனால் நீங்களும் தர்மபுரிக்கு சென்றால் இந்த அதியமான் கோட்டையை கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
2. கோட்டை கோவில்:
அடுத்து நாம் பார்க்க இருப்பது கோட்டை கோவில் பற்றி தான். தர்மபுரியில் அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. அதனால் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் இந்த கோவிலில் உள்ள இரண்டு தூண்கள் தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது. அதனால் இதனை பார்ப்பதற்கும் பலர் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். அதனால் நீங்களும் தர்மபுரிக்கு சென்றால் இந்த கோட்டை கோவிலுக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா
3. நாகாவதி அணை:
அடுத்து நாம் பார்க்க இருப்பது நாகாவதி அணை பற்றி தான். இந்த நாகாவதி அணை தர்மபுரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. M.G.R ஆல் கட்டப்பட்ட இந்த அணை சிறந்த மீன்பிடி ஸ்தலமாகவும் மற்றும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளது.
அதனால் நீங்கள் தர்மபுரிக்கு சென்றால் இந்த நாகாவதி அணைக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
4. ஸ்ரீ வீர ஹனுமான் கோவில்:
இந்த ஸ்ரீ வீர ஹனுமான் கோவில் தர்மபுரியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தம்பட்டியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஹனுமான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த கோவில் ஒரு சிறிய ஓடையின் மேல் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. அதனால் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அதனால் நீங்களும் தர்மபுரிக்கு சென்றால் இந்த ஸ்ரீ வீர ஹனுமான் கோவிலுக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
5. தொப்பையாறு அணை:
இந்த தொப்பையாறு அணை தர்மபுரியிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பூரில் அமைந்துள்ளது. இந்த அணை 1986-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
அமைதியான மலைப்பகுதில் அமைந்துள்ள இந்த அணை கண்டிப்பாக தர்மபுரியில் சுற்றிப்பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா ஸ்தலமாக இந்த தொப்பையாறு அணை உள்ளது. அதனால் நீங்களும் தர்மபுரிக்கு சென்றால் இந்த தொப்பையாறு அணைக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்
6. பஞ்சபள்ளி அணை:
இந்த பஞ்சபள்ளி அணை 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சபள்ளியில் அமைந்துள்ளது. இந்த அணை 1977-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
பாலக்கோடிலிருந்து தேன்கனிக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த அணை மலைகளால் சூழப்பட்டு மிகவும் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. அதனால் இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அதனால் நீங்களும் தர்மபுரிக்கு சென்றால் இந்த பஞ்சபள்ளி அணைக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |