கொச்சினில் கண்ணை கவரும் அருமையான 5 சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா..?

Advertisement

கொச்சின் சுற்றுலா இடங்கள்

இயற்கையின் அழகு என்று பெயர் பெற்றுள்ள கேரளா மாநிலத்தை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அந்த கேரளா மாநிலத்தில் கண்ணை கவரும் வகையில் அற்புதமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அத்தகைய சுற்றுலா தளங்களில் கொச்சினும் ஒன்று. கொச்சினிற்கு ஒரு தடவை சென்றால் போதும் வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம் என்று நாம் நினைக்கும் அளவிற்கு அவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன. சரி வாருங்கள் அந்த இடங்கள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு நாம் சுற்றுலா செல்லும் போது மறக்காமல் கொச்சினிற்கு சென்று விட்டு வரலாம்.

இதையும் படியுங்கள்⇒ கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Cochin Tourist Places in Tamil:

Fort Kochi Places in Tamil:

Fort Kochi Places in Tamil

போர்ட் கொச்சி என்ற இடமானது முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கும். அது கேரளாவின் கோர்சல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு ரோடு வழியாகவும் அல்லது போட் வழியாகவும் செல்லலாம். மஹாத்மா காந்தி கடற்கரை இந்த போர்ட் கொச்சியில் இடம் பெற்றுருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இங்கு நிறைய கடைகள் மற்றும் சரக்கு கப்பல்கள் போன்றவற்றவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ST Francis Church Kochi:

ST Francis Church Kochi

இரண்டாவதாக கொச்சியில் நாம் பாக்கபோகும் இடம் ST Francis Church. இந்த சர்ச் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டள்ளது. மேலும் இந்த சர்ச்சிற்கு வாஸ்கோ ட காமா மூன்றாவது முறையாக வரும் போது இங்கேயே உயிரிழந்தார். ஆகையால் அவரது உடல் இந்த சர்ச்சில் நல்ல அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ST Francis Church மிகவும் பிரபலமாகாக சொல்லப்படுகிறது.

சர்ச்சை சுற்றி பார்த்து விட்டு வெளியில் வந்தால் அங்கு எண்ணற்ற கடைகள் வித விதமாக காணப்படும். அந்த கடைகளில் அனைத்து பொருட்களும் இருக்கும். எந்த பொருளை பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற ஆசை வரும் அளவிற்கு நிறைய பொருட்கள் இருக்கும்.

Chinese Fishing Nets Kochi in Tamil:

Chinese Fishing Nets Kochi in Tamil

அடுத்து கொச்சியில் நாம் பார்க்க போகும் இடம் Chinese Fishing Nets. இந்த பிஷ் நெட்டில் பலவகையான மீன்கள் காணப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் அனைத்து மீன்களும் உயிருடன் பிடித்து விற்பனை செய்படுகிறது. நீங்கள் ஒரு முறை இந்த இடத்திற்கு வந்தால் போதும் மறக்கவே மாட்டீர்கள்.

மட்டஞ்சேரி அரண்மனை:

மட்டஞ்சேரி அரண்மனை

Chinese Fishing Nets-ற்கு மிக அருகில் மட்டஞ்சேரி அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1545- ஆம் ஆண்டு கட்டப்பட்டு கொச்சியின் மன்னரான வீரகேரளா வர்மனுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரண்மையில் மாகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற சிறப்பு மிக்க சங்க கால கதைகள் அனைத்தும் சுவர் ஓவியத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

அதுமட்டும் இல்லாமல் இந்த அரண்மனையில் பல வகையான பல்லாக்குகள் மற்றும் மன்னர்கள் பயன்படுத்திய ஆடை, அணிகலன், வாள் இவை அனைத்தும் பார்வைக்காக வைத்து இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த மட்டஞ்சேரி அரண்மையை Touch Palace என்றும் அழைக்கின்றனர். 

Clock Tower in Tamil:

Clock Tower in Tamil

கடைசியாக நாம் பார்க்க போகும் இடம் Clock Tower. இந்த Clock Tower ஆனது 1760 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதனுடைய சிறப்பு என்னவென்றால் 45 அடி உயரத்தில் இடப்பெற்றுள்ள மணி கூண்டு தான். அதுமட்டும் இல்லாமல் இந்த மணிக்கூண்டானது 4 பக்கங்கள் கொண்டிருக்கும்.

நீங்கள் கொச்சிற்கு சென்றால் மறக்காமல் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் கண்டுகளியுங்கள்.

இதையும் படியுங்கள் => வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய தோட்டங்கள்..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement