சதுரகிரி மலை சிறப்பு | Tourist Places Near Sathuragiri
சிவனிற்கு ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் முக்கியமான கோவில் என்றால் அது சதுரகிரி தான். இந்த கோவில்களுக்கு என்றும் தனி சிறப்பு உள்ளது. இந்த கோவில்களுக்கு ஆடி அமாவாசை அன்று நிறைய பக்தர்கள் செல்வார்கள். அங்கு சிறப்புமிக்கது என்னவென்றால் சதுரகிரி மலை தான். மேலும் இந்த சதுரகிரியில் சுற்றி பார்க்கவேண்டிய இடங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்..!
சதுரகிரியில் சுற்றி பார்க்க வேண்டிய இடம்:
இந்த கோவிலில் ஆடி அமாவாசை அன்றும் தை அமாவாசை அன்றும் தான் நடை திறப்பார்கள். இந்த கோவிலில் சுந்தர மஹாலிங்கம், சந்தன மஹாலிங்கம் என்று 2 லிங்கம் உள்ளது.
இந்த சதுரகிரி மலையை ஏறி இறங்கும் போது எந்த வித நோயாக இருந்தாலும் குணமாகவும் என்று நம்பப்படுகிறது. குணமாகும் என்பதை விட எந்த வித நோயும் நம்மை நெருக்காது. இங்கு பிரபலமான குகையும் உள்ளது. இதில் நிறைய சித்தர்கள் வந்து தவம் செய்த இடம் என்றும் சொல்லப்படுகிறது.
மலையை ஏறுவதற்கு முன் காணிப்பாறை என்று கீழ் பக்கம் ஒரு ஏரியா உள்ளது. அங்கு உள்ள விநாயகரை வணங்கிய பின் தான் மலையை ஏறவே ஆரம்பிக்க வேண்டும்.
மலையை பாதி தூரம் கடந்த பின் பிலாவடி கருப்பசாமி என்ற கோவில் உள்ளது. அங்கு ஒரு பலாமரம் உள்ளது. அந்த மரத்தில் எப்போதும் காய்கள் காய்த்துக் கொண்டே இருக்கும்.
சதுரகிரி மலையை ஏறுவது மிகவும் கடினம். பாதைகள் மிகவும் கடினமாக இருக்கும். போகும் வழியில் முடக்கத்தான் சூப் குடிப்பார்கள். ஏனென்றால் மலையை ஏறும் போது மூட்டு வலிகள் இல்லாமல் இருக்கும் என்பதால்.
மலைக்கு மேல் சென்ற உடன் உணவுக்கு குறைவு இருக்காது. அனைத்து நேரத்திலும் அன்னதானம் நடந்துகொண்டே இருக்கும்.
சதுரகிரியில் உள்ள லிங்கம் சாய்ந்து இருக்கும். ஏனென்றால் இங்கு நிறைய சித்தர்கள் தவம் செய்யும் போது அவர்களுக்கு காட்சி அளித்து தலைசாய்த்து உறங்கினார். ஆகவே சதுரகிரியில் லிங்கம் சாய்ந்து இருக்கும்.மேலும் இங்கு காளியம்மன், கருப்பன் என்ற சாமிகள் அனைத்தும் பேய்கள் பிசாசுகளை விரட்டும் சக்திகளை கொண்டுள்ளார்கள்.
ஆகவே இங்கு செல்லும் போது இந்த இடத்தில் உள்ள அனைத்தையும் பார்த்து செல்லுங்கள்.
தெரிந்துகொள்ளுங்கள்👉👉 அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..!
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |