முயல் பற்றிய நமக்கு தெரியாத சில தகவல்கள்..!

rabbit information in tamil

Rabbit Information in Tamil

பொதுவாக நாம் நிறைய வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை பார்த்து இருப்போம். அதிலும் நிறைய விலங்குகள் வீட்டில் செல்ல பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. வீட்டு செல்ல பிராணி என்றால் நாய் மற்றும் பூனை இவை இரண்டும் பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது. ஆனால் இப்போது எல்லாம் நிறைய நபர்கள் வீட்டில் முயலையும் வளர்த்து வருகின்றனர். முயலை பற்றி நாம் புத்தகங்களில் சிறிய வயதில் படித்ததோடு சரி வேறு எதுவும் நமக்கு அவ்வளவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து நிறைய முயல் புகைப்படத்தை பார்த்து ரசித்து இருக்கிறோம் அவ்வளவு தான். உங்களுக்கு முயலை பற்றி நிறைய தகவல்கள் தெரிய வேண்டும் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்.

ஓட்டகம் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

முயல் பற்றிய தகவல்:

முயல் பற்றிய தகவல்

இப்போது பலருடைய வீட்டில் செல்லப்பிராணியாக  வளரும் முயல் பன்னி முயல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய முயல்கள் மொத்தம் 11 வகையான இனங்களை சேர்ந்ததாகும்.

இதில் ஆண் முயல் பக் என்றும் பெண் முயல் டோ என்றும் அழைக்கப்படுகிறது. அதைப்போல புதிதாக குட்டி போடும் முயலினை பூனைக்குட்டிகள் அல்லது கிட்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆசியா மற்றும் அண்டார்டிக்காவை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் முயல்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காடுகளில் வசிக்கும் முயல்கள் தன்னுடைய காலினால் மண்ணை குடைந்து தனக்கான மற்றும் தன் குடும்பத்திற்கான இடத்தை உருவாக்கி கொள்கிறது.

அதுமட்டும் இல்லாமல் மற்ற விலங்குகள் எதவும் தாக்காத அளவிற்கு துளையினை வைத்து அதன் மூலம் ஆபத்து வருவதினை அறிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை முயலுக்கு இருக்கிறது.

ஆனால் வீட்டில் முயல்கள் வளர்க்கும் போது அதற்கு மிதமான வெப்பநிலை உள்ள இடம் கட்டாயமாக தேவை.

வெள்ளை முகம் கொண்ட கபுச்சின் குரங்கு பற்றிய தகவல்

முயல் உணவு:

முயல் உணவு

முயல் அசைவ உணவுகளையோ அல்லது பிற உயிரினங்களை வேட்டை ஆடியும் சாப்பிடுவதில்லை. காய்கறிகள், பழங்கள் மற்றும் புல்கள் ஆகியவற்றை மட்டும் தான் உணவாக எடுத்துக்கொள்கிறது.

பொதுவாக முயல்களின் உணவுதேடும் நேரம் என்றால் அது விடியற்காலை பொழுது தான். ஏனென்றால் அப்போது தான் மிதமான வெளிச்சம் இருக்கும் அந்த நேரத்தில் உணவுகளை தேடினால் மற்ற விலங்குகளிடம் இருந்து தாக்கம் எதுவும் ஏற்படமால் பிழைத்து கொள்ளலாம் என்பது அதனுடைய பழக்கம் ஆகும்.

அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்..!

முயல் இனப்பெருக்கம்:

முயல் இனப்பெருக்கம்

ஒரு பெண் முயலின் இனப்பெருக்கத்திற்கான காலம் என்பது அதனுடைய 8 மாதத்தில் இருந்து தொடர்கிறது. ஒரு முயலின் கர்ப்ப காலம் என்பது 30 நாட்கள் ஆகும். ஒவ்வொரு முயலும் அதிகபட்சமாக 10 குட்டி போடுகிறது.

குட்டி முயல்களுக்கு 7 நாட்களில் முடி வளர்ந்து 21-வது நாளில் கண்ணை திறக்கிறது. முயலின் சராசரியான ஆயுட்காலம் என்பது 9 ஆண்டுகள் ஆகும்.

மேலும் விலங்குகள் பற்றிய சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 விலங்குகள் பற்றிய தகவல்கள்