SBI Bank 6 Lakh Home Loan EMI Calculator
இந்த காலத்தை பொறுத்தவரை நிறைய நபர்களுக்கு எப்படியாவது சொந்த வீடு கட்டியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பார்கள். அதற்காக நிறைய வகையான பட்ஜெட்டுகளை போட்டு அதன் படி செயல்பட்டே தீர வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை செய்வார்கள். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக வங்கியில் வீட்டுக் கடன் பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அத்தகைய கடனை பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு விருப்பமான வங்கிக்கு செல்வார்கள். ஆனால் அந்த வங்கியில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர அதற்கான வட்டி எவ்வளவு மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் என்ன இது போன்றவற்றை எல்லாம் யோசிக்கவும் மாட்டார்கள். ஒரு வேளை அப்படி யோசித்தாலும் கூட அதனை எப்படி தெரிந்துக்கொள்வது என்ற குழப்பம் வந்துவிடும். உங்களுக்கு இருக்கும் இதுபோன்ற குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு Banking பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று SBI வங்கியில் 6 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
SBI வங்கியில் வீட்டு கடனாக 6 லட்சம் ரூபாய் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
வட்டி விகிதம்%:
SBI வங்கியில் 6 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் என்பது 8.50% ஆகும்.
கடனுக்கான காலம்:
நீங்கள் 6 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக பெற்றால் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.
மாதாந்திர EMI தொகை:
SBI வங்கியில் 6 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை 12,309 ரூபாய் ஆகும்.
மொத்த வட்டி தொகை:
நீங்கள் பெற்ற 6 லட்சத்திற்கான மொத்த வட்டி தொகை 1,38,595 ரூபாய் ஆகும்.
கடனை செலுத்துவதற்கான மொத்த தொகை:
SBI வங்கியில் நீங்கள் பெற்ற மொத்த 6 லட்சம் ரூபாய்க்கான மொத்த கடன் தொகை என்று பார்த்தால் வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தம் 7,38,595 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |