ரூ.1000 தான் முதலீடு ஆனால் மாத வருமானம் ரூ.60 ஆயிரம்

Advertisement

பானி பூரி விற்பனை தொழில் யோசனை – Pani Puri Business

சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் அனைவருமே ஒரு நல்ல டிமாண்ட் உள்ள தொழிலை ஐந்து செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அப்படி தினமும் வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்றினை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாட்டில் இருக்கக்கூடிய அனைவருமே விரும்பி சாப்பிட கூடிய ஃபாஸ்ட் புட் வகைகளில் முதலிடம் வகிப்பது பானி பூரி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரம் வந்துவிட்டது என்றால் பானி பூரி வாங்க செல்வார்கள். அந்த அளவிற்கு பானி பூரி பிரபலம் அடைந்து வருகிறது. இந்த பானி பூரி சார்ந்த தொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Pani Puri Business

முதலில் பானி பூரி செய்வதற்கு அணைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு வாங்கும் பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் பானி பூரி செய்யும் போது கையுறை பயன்படுத்தி சுத்தமாக செய்ய வேண்டும்.

பெரும்பாலான இடங்களில் பானி பூரி விற்பனை செய்பவர் யாராக இருக்கும் என்றால் வாட இந்தியர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் உட்பட அனைத்தும் சுகதரமின்றி இருப்பதை நாம் கண்கூட கண்டிருப்போம்.

ஆனால் அதையும் தாண்டி பலர் இந்த பானி பூரியின் சுவைக்கு அடிமையாகி விட்டதால் சுகாதாரத்தை கூட பொருட்படுத்துவதில்லை. இத்தகைய பானி பூரியை சுத்தமாகவும், சுவையாகவும் தந்தால் அது ஒன்றே போதும் நாம் இந்த தொழிலில் சாதிக்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.50 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கும் அற்புதமான 4 தொழில்கள்

அதுமட்டும் இல்லாமல் நீங்கள் பானி பூரி மற்றும் பானி தண்ணீரை சுவையாக செய்வது தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் அப்போதுதான் உங்களுக்காக வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த முடியும்.

முதலீடு:

இந்த தொழிலுக்கான முதலீடு என்பது நீங்கள் தொடங்கக்கூடிய தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும், ஆரம்பத்தில் வெறும் 1000 ரூபாய் வைத்து கூட இந்த தொழிலை நீங்கள் துவங்க முடியும்.

தேவையான இடம்:

இந்த தொழிலில் நல்ல வருமானம் பெற வேண்டும் என்றால், மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக கல்லூரி, பூங்கா, பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் இந்த தொழிலை ஆரம்பித்தால் நல்ல வருமானத்தை பெற முடியும்.

வருமானம்:

ஒரு பானி பூரி பிளேட்  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே நீங்கள்  ரூபாய் என தினமும் 150 பிளேட் விற்பனை செய்தால் கூட தினமும் 3000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

அதில் நீங்கள் செய்த முதலீடு 1000 ரூபாய் போக 2000 ரூபாய் லாபத்தை நீங்கள் பெறலாம். எனவே இதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு 60,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

குறிப்பு:

இங்கு கூறப்பட்டுள்ள குறிப்பு அனைத்தும் ஒரு தோராயமாக கூறப்பட்டுள்ள மதிப்பு மட்டுமே. மேலும் வருமானம் என்பது உங்கள் தொழிலின் இடத்தை பொறுத்து தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024-ன் ட்ரெண்டிங் business, லாபமும் கைநிறைய !

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement