SBI Home Loan Eligibility Criteria
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையினால் பணத்தை சேமித்து வைத்து வீடு கட்ட அரமிக்கிறீர்கள். ஆனால் என்ன தான் சேமித்து வைத்து வீடு கட்ட ஆரமித்தாலும் கடன் வாங்காமல் வீட்டை கட்டி முடிக்க முடியாது. சிறிதாய் அளவில் பணம் தேவைப்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பெற்று கொள்கிறோம். அதுவே பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளிடமிருந்து பெற்று கொள்ளலாம். வங்கிகளிடமிருந்து கடனை அப்ளை செய்வதற்கு முன்னால் தகுதியினை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கான தகுதிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
போஸ்ட் ஆபிஸில் PPF சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா..?
SBI வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு தகுதிகள்:
வேலைவாய்ப்பு வகை | சம்பளம் பெறுபவர்கள்/ சுயதொழில் செய்பவர்கள் |
வயது | குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 70 வயது |
சிபில் ஸ்கோர் | 600 முதல் 750வரை |
கடன் காலம் | அதிகபட்சம் 30 வருடம் |
வட்டி | 6.95% |
சம்பளத்தின் அடிப்படையில் எவ்வளவு கடன் வழங்கப்படும்:
சம்பளம் | கடன் தொகை |
ரூ. 25,000 | ரூ.15,10,693 |
ரூ. 30,000 | ரூ.20,39,435 |
ரூ. 35,000 | ரூ.23,79,341 |
ரூ. 45,000 | ரூ.30,59,153 |
ரூ. 50,000 | ரூ.33,99,059 |
ரூ. 55,000 | ரூ.41,54,405 |
ரூ. 60,000 | ரூ.45,32,079 |
ரூ. 65,000 | ரூ.52,87,425 |
ரூ. 70,000 | ரூ.52,87,425 |
ரூ. 75,000 | ரூ.56,65,098 |
தேவைப்படும் ஆவணங்கள்:
- நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
- விண்ணப்பதாரரின் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- அடையாளச் சான்று (வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை)
- வசிப்பிடச் சான்று (தொலைபேசி கட்டணம் அல்லது மின்சாரக் கட்டணம் போதுமானது)
- சம்பளம் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு, வணிகச் சான்று தேவை
கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை - தனிப்பட்ட சொத்து அறிக்கை
SBI வங்கியில் Account திறக்க என்ன தகுதி வேண்டும் தெரியுமா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |