தலை துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரம் உயிருடன் இருக்கும் கரப்பான் பூச்சி!! ஏன் தெரியுமா?

Advertisement

தலை துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரம் உயிருடன் இருக்கும் கரப்பான் பூச்சி!! ஏன் தெரியுமா? | How Long Can a Cockroach Live Without its Head in Tamil

How Long Can a Cockroach Live Without its Head in Tamil – கரப்பான் பூச்சியை பார்த்தாலே அனைவருக்கும் எரிச்சலுணர்வு தான் ஏற்படும். காரணம் அது அசுத்தமான பூச்சிகள் இனத்தை சேர்ந்தது. இது நாம் வாழும் இடத்தில் இருந்தால் நமது ஆரோக்கியத்திற்கு தான் பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக தான் அனைவருக்குமே கரப்பான் பூச்சியை பிடிப்பதில்லை. இருப்பினும் கரப்பான் பூச்சியை பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது அதனை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். அதாவது தலை துண்டிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரம் உயிருடன் இருக்குமாம் கரப்பான் பூச்சி. இந்த விஷயத்தை உங்களால் நம்பமுடியவில்லையா? நீங்கள் நம்பலேன்னாலும் இது தான் உண்மை. சரி வாங்க அது எப்படி தலை இல்லாமல் ஒரு வாரம் வரை உயிர் வாழ்கிறது என்று படித்து தெரிந்துகொள்வோம்.

கரப்பான் பூச்சி தலை இல்லாமல் எவ்வளவு காலம் வாழ முடியும் தெரியுமா? How Long Can a Cockroach Live Without its Head in Tamil:how long can a cockroach live without its head in tamil

பொதுவாக கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் ஒன்பது நாட்கள் வரை உயிர் வாழிமாம்.

தலை துண்டிக்கப்பட்டாலும் அதன் கால்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்.

தலை துண்டிக்கப்பட்ட பிறகும் எந்த உயிரினமும் எப்படி உயிருடன் இருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்? அது எப்படி சுவாசிக்கு என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புளியமரத்தை சாலை ஓரங்களில் வளர்பதற்கு காரணம் என்ன..?

கரப்பான் பூச்சிகள் மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை. மாறாக, அவர்களின் உடலில் பல சிறிய துளைகள் உள்ளன. அந்த துளைகள் வழியாக தான் காற்றினை சுவாசிக்கிறதாம். இதன் காரணமாக தான் தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் அது உயிருடன் இருக்கிறது.

ஒன்பது நாட்களுக்கு பிறகு ஏன் இறந்துவிடுகிறது என்றால் காற்றினை உடல் வழியாக சுவாதித்தாலும். உணவை வாய் வழியாகத்தான் சாப்பிடுகிறது. அந்த வாய் பகுதியானது தலை பகுதியில் தான் இருக்கிறது. ஆக அதன் தலை துண்டிக்கப்பட்ட பிறகு அதனால், சாப்பிட முடிவதில்லை. இருந்தாலும் தனது உடலில் அதிக அளவு புரதத்தை சேமித்து வைத்திருக்கும் நிலையில், அதன் உதவியுடன் 9 நாட்கள் உயிருடன் இருக்கிறது. ஆனால் அதன் பிறகு அது பசி மற்றும் தாகத்தால் இறக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement