புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று சொல்ல காரணம் தெரியுமா?

Advertisement

Pulla Poochi Yen Kolla Kudathu

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை தான் பார்க்க போகிறோம். நாம் சிறு வயதில் இருந்தே எறும்பு, ஈ, வண்டு, கரப்பான் பூச்சி போன்ற சில வகையான பூச்சிகளை நாம் பார்த்திருப்போம். அதேபோல சில இடங்களில் புள்ள பூச்சி என்ற ஒரு உயிரினம் இருக்கும். புள்ள பூச்சியை நம்மில் பலரும் பார்த்திருப்பார்கள். சிலர் பார்த்திருக்க மாட்டார்கள். சரி ஏன் புள்ள பூச்சியை கொள்ள கூடாது அடிக்க கூடாது என்று சொல்கிறார்கள். இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

பூனை குறுக்கே சென்றால் அந்த வழியில் செல்லக்கூடாது என்று சொல்லுவதற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியுமா ..?

புள்ள பூச்சியை ஏன் கொள்ள கூடாது..? 

புள்ள பூச்சியை ஏன் கொள்ள கூடாது

நாம் பெரும்பாலும் நம் வீட்டு பகுதியில் இந்த புள்ள பூச்சியை பார்த்திருப்போம். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புள்ள பூச்சியை அடிக்க கூடாது கொள்ள கூடாது என்று சொல்லி இருப்பார்கள். அதற்கு நாம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டிருப்போம்.

அதற்கு அவர்கள் புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்ற காரணத்தை கூறுவார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று நமக்கு மேலும் குழப்பம் எழுந்திருக்கும். நம் முன்னோர்கள் கூறிய இந்த வார்த்தைக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

 நம் முன்னோர்கள் இந்த புள்ள பூச்சியை ஒரு பரிதாபமான உயிராக பார்த்தார்கள். காரணம் இந்த பூச்சியானது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு உயிரியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்த பூச்சிக்கு தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளும் பண்புகளும் கிடையாது.  

அதனால் தான் இந்த புள்ள பூச்சியை நம் முன்னோர்கள் பாவப்பட்ட உயிரியாக பார்த்தார்கள்.

இதையும் படித்துபாருங்கள்=> கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 pulla poochi yen adikka kudathu in tamil

இந்த பூச்சியானது எறும்பு மற்றும் மண்புழுக்களை போலவே நிலத்தில் துளையிட்டு வாழக்கூடியது. அதனால் மண்புழுவை போலவே இதுவும் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், இந்த புள்ள பூச்சியை நாம் பிடித்து திருப்பி போட்டால் அந்த பூச்சியால் நகரவோ ஓடவோ முடியாது. அந்தநேரம் அது தன் கால்களை ஒரு பச்சிளம் குழந்தை அசைப்பது போல அசைத்து கொண்டிருக்கும்.

அதாவது ஒரு குழந்தை தன் கை கால்களை எப்படி அசைத்து விளையாடுமோ அதுபோல தான் இந்த பூச்சியின் கால்களும் இருக்கும். அதனால் தான் இதற்கு புள்ள பூச்சி என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். 

 இந்த பூச்சியை கருணை மற்றும் இரக்கம் அடிப்படையில் பார்த்ததால் தான் இதை அடிக்கவோ கொள்ளவோ கூடாது என்று கூறினார்கள். இதை மக்களிடம் சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதற்காக தான் புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று கூறினார்கள்.  

இது தான் புள்ள பூச்சியை கொள்ள கூடாது என்று சொல்வதற்கான காரணம்..!

இதையும் படியுங்கள்⇒   தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா..! சுழிகளின் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement