ஒருவர் இறந்து விட்டால் உடனேயே கண் இமையை மூடுவதற்கு என்ன காரணம்..

Reason For Closing Eyelid After Death of Man in Tamil

Reason For Closing Eyelid After Death of Man in Tamil

மனிதன் பிறந்த பிறகு செய்யும் சுப நிகழ்ச்சிகளை விட இறந்த பிறகு அவனுக்கு செய்யும் சடங்குகள் ஏராளம். பால் தெளிப்பு, கருமாதி, 30, தீபாவளி படையல், பொங்கல் படையல், தெவசம் என்று ஒரு வருடம் வரைக்கும் அவருக்காக பல காரியங்கள் செய்யப்படுகிறது. அதிலும் மனிதன் இறந்த உடனே அவர்களை குளிக்க வைத்து கால் இரண்டு கட்டை விரலையும் சேர்த்து துணி வைத்து கட்டுவார்கள், பிறகு வாய் தாடை பகுதியிலும் சேர்த்து வைத்து கட்டுவார்கள். முக்கியமாக ஒருவர் இறந்து விட்டார் என்று கன்பார்ம் செய்தவுடன் கண்களை மூடி விடுவார்கள். இதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம் வாங்க..

மனிதன் இறந்த பிறகு கண்களை மூடுவதற்கான காரணம்:

மனிதன் இறந்த பிறகு அவனுக்கு பல விதமான காரியங்கள் செய்யப்படுகிறது. அதில் முதலில் செய்வது கண் இமையை மூடுவது தான். ஒரு வேலை கண்ணை மூடாமல் விட்டுவிட்டால் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். அவர் உயிருள்ள மாதிரியாகவே இருக்கும். அதுமட்டுமில்லமால் இறந்த உடனே 2 மணி நேரத்தில் கை மட்டும் கால்கள் விறைக்க ஆரம்பித்துவிடும். 

இறந்தவர்களின் முன்னிலையில் போலீஸ் நின்றால் ஏன் தொப்பியை கழட்டுகிறார்கள் தெரியுமா..?

 இறந்தவுடன் முதலில் விறைக்க இருக்கும் கண்கள் தான். அதனால் தான் அதை முதலில் மூடுகிறார்கள். இறந்தவுடனே கண்களை மூடினால் தான் மூட முடியும். இதற்கு பெயர் மரண விறைப்பு (Rigor mortis). நீங்கள் நேரம் கழித்து கண்ணை மூட ட்ரை செய்தாலும் மூட முடியாது.  

அது போல மனிதன் உட்கார்ந்து இறந்து போனால் அவர்களை உடனடியாக கால் மட்டும் கைகளை நீட்டி விடுவார்கள். ஏனென்றால் கொஞ்சம் நேரம் ஆனதும் உடல்கள் விறைக்க ஆரம்பித்திவிடும். உடல் விறைக்க ஆரம்பித்ததும் நீங்கள் கால் மற்றும் கைகளை நீட்ட முயற்சித்தால் நீட்ட முடியாது. அதனால் இறந்தவுடன் கால் மற்றும் கைகளை நீட்டி வைக்கிறார்கள்.

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும்..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts