Scientific Reason Behind Hanging Lemon and Chillies in Tamil
இந்து சமையத்தில் நிறைய சம்பிரதாயம் செய்வது வழக்கம். அதேபோல் லட்சமி கடாட்சம் கிடைக்கும் என்று நிறைய ஆன்மீக ரீதியாக பூஜைகளை செய்வோம். அதேபோல் கண் திஷ்டி படக்கூடாது என்று விட்டு வாசலில் பரிகாரத்தை செய்வார்கள். அதேபோல் வீட்டு வாசலில் கண் திஷ்டிக்கு தேங்காய், எலுமிச்சை பழம், மிளகாய், சேர்த்து நிலைவாசலில் கட்டிவிடுவார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
சிலருக்கு தெரியும் என்று சொல்வார்கள். சிலருக்கு தெரியாது ஆன்மீக காரணங்கள் தெரிந்தாலும் அறிவியல் காரணம் தெரிய வாய்ப்பு குறைவு தான் வாங்க அதையும் தெரிந்துகொள்வோம் வாங்க..!
வாசலில் எலுமிச்சை பழம், மிளகாய் கட்டுவதின் ஆன்மீக காரணம் என்ன?
வீட்டு வாசலில் எலுமிச்சை, காரத்திற்கு மிளகாய், சூடான பொருளுக்கு கரி சேர்த்து கட்டி விடுவார்கள் இதனை ஏன் கட்டிவிடுவார்கள் என்றால் அலட்சுமி வராமல் இருக்கும் கட்டிவிடுவார்கள்.அது யார் அலட்சுமி என்று யோசிப்பீர்கள். இவர் மகாலட்சிமியின் தங்கை ஆவாள் அதாவது மகாலட்சுமியின் சகோதரி அலட்சுமி எனும் மூதேவியாவாள் இவள் வீட்டிற்குள் வந்தால் வீட்டில் உள்ள செல்வத்தை அனைத்தையும் எடுத்து சென்றுவிடுவார் என்பார்கள்.
மூதேவிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு காரணம், சூடு தான், அதனால் தான் மிளகாய், எலுமிச்சைப்பழம் கரிகட்டை அனைத்தையும் சேர்த்து கட்டிவிடுவார்கள். இதனை சாப்பிட்டு விட்டு வீட்டிற்குள் வராமல் போய்விடும்.
வாசலில் எலுமிச்சை பழம் மிளகாய் கட்டுவதின் அறிவியல் காரணம் என்ன..?
எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் – சி’ அதிகம் உள்ளது. இது இரண்டையும் சேர்த்து நூலில் கட்டிவிட்டால் எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு மெல்ல மெல்ல நூலின் வழியே மிளகாய்க்கு சென்று அந்த சாறு ஆவியாகும்அதனை நாம் சுவாசிக்கும் போது ஆரோக்கிய பிரச்சனை ஏற்படாது எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் சென்றுவிடும். ஆகவே தான் அதனை நம் முன்னோர்கள் கட்டிவிட்டார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாசலில் கோலம் போடுவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |