வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் யார் தெரியுமா..?

Updated On: March 20, 2024 4:36 PM
Follow Us:
Finance Minister Of Tami lnadu
---Advertisement---
Advertisement

Finance Minister Of Tamilnadu

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நம் நாட்டின் அரசியல் அமைப்பு என்பது மிகவும் பெரியது. நம் நாட்டில் பலருக்கும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதுபோல அரசியலில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன. அதில் எத்தனை துறைகள் இருக்கின்றன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம்.

சரி நம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அவர் யார் என்றும், அவரை பற்றிய சில தகவல்களையும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் யார்..

நிதி அமைச்சர் என்றால் என்ன..? 

பொதுவாக நிதி அமைச்சகம் என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இந்து இந்தியாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இதில் தலைவராக இருப்பவர் நிதியமைச்சர் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிதி  அமைச்சகத்தின் பணியானது வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

அதுபோல நிதி அமைச்சர் என்று சொல்லக்கூடியவர், அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிதி அமைச்சரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள், அரசின் நிதியறிக்கையை உருவாக்குவதும்,  பொருளாதாரத்தை நிர்வகிப்பதும் ஆகும்.

இப்போது நிதி அமைச்சகம் என்றால் என்ன மற்றும் நிதியமைச்சர் என்பவர் யார் என்று தெரிந்து கொண்டோம். சரி அடுத்து நம் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் யார் என்று பார்க்கலாம் வாங்க.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் யார்..? 

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் யார்

நம் தமிழ்நாட்டிற்கும் நிதி அமைச்சர் என்பவர் இருக்கிறார். தங்கம் தென்னரசு என்பவர் தான் தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பிறப்பு : ஜூன் 3, 1966

பெற்றோர்: தங்கபாண்டியன் – ராஜாமணி

ஊர்: மல்லாங்கிணறு, தமிழ்நாடு, இந்தியா

அரசியல் கட்சி : திராவிட முன்னேற்றக் கழகம்

படிப்பு: பொறியியல் பட்டம் பெற்றவர்

அரசியல் வாழ்க்கை: 

  • இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • பின் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
  • அடுத்து 2021 மே 7 அன்று தமிழக தொழிற்துறை (தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்) அமைச்சராக பதவியேற்றார்.
  • பின்பு மே 11, 2023 அன்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇
மிக பழமையான நூல் எது 
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது 
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது 
பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது 
இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும் 
தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2023
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now