அது என்ன முடவாட்டுக்கால் கிழங்கு? அதனுடைய பயன்கள் என்ன?

முடவாட்டுக்கால் கிழங்கு நன்மைகள் – Mudavattukal Kilangu Benefits in Tamil

முடவாட்டுக்கால் கிழங்கு என்பது பார்ப்பதற்கு ஆடுகால் மாதிரியே இருக்கும். இது ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. இந்த கிழங்கு குறைந்தபட்சம் 1000 அடிக்கு மேல் இருக்குடிய மலையில் தான் விளையக்கூடியது. அதுவும் இரண்டு பாறைகளுக்கு இடையில் வளரக்கூடிய தாவரம் ஆகும்.

குறிப்பாக 15 டிகிரி குளிச்சியான இடத்தில் மட்டும் தான் வளரக்கூடிய கிழங்காகும். இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் பற்றி தான் இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.

இந்த கிழங்கு எங்கு கிடைக்கும், மருத்துவ பயன்கள் என்ன, இந்த கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும் என்ற முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள்:முடவாட்டுக்கால் கிழங்கு

இந்த முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலிக்கு மிக சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதாவது இரண்டு மூட்டுக்கு இடையில் இருக்க கூடிய பசை அல்லது ஜவ்வு வளர்ச்சியடைவதற்கு உதவும் ஒரு சுரப்பியை அதிகரிக்க செய்யும் பணியினை இந்த முடவாட்டுக்கால் கிழங்கு செய்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடையை குறைக்க சியா விதை சிறந்ததா..? சப்ஜா விதை சிறந்ததா..?

சாப்பிடும் முறை:

இந்த முடவாட்டுக்கால் கிழங்கை 25 கிராம் முதல் 30 கிராம் வரை அளவில் கட் செய்து அதனுடன் தேவையான அளவு இஞ்சி, சுக்கு மிளகு, தக்காளி, உப்பு  ஆகியவற்றை சேர்த்து சூப் தயாரிக்கவும்.

மதியம் ஒரு மூன்று மணி முதல் 4 மணிக்குள் அருந்தவும். இவ்வாறு அருந்துவதால் இரவு நல்ல உறக்கம் வரும், விடிந்தபிறகு நல்ல மலமிளக்கியாகவும், கைகால் வலி, உடம்பு வலி போன்றவற்றிக்கு ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும்.

தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும்.

சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.

முடவாட்டுக்கால் கிழங்கு எங்கு கிடைக்கும்?

கொல்லிமலை, ஏற்காடு போன்ற பகுதிகளில் தான் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கும். மேலும் உங்களுக்கு இந்த முடவாட்டுக்கால் கிழங்கு வேண்டும் என்றால் உங்கள் ஊரில் உள்ள நாட்டுமருந்து கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு கிரீம் அப்ளை செய்தால் மட்டும் போதாது..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்