தண்டனை சட்டம் 131 மற்றும் 132-ன் விளக்கம்
நாம் தொடர்ந்து ஒவ்வொரு தண்டனை சட்டம் பிரிவுகளிலும் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்ன மற்றும் அந்த குற்றத்திற்கான தக்க தண்டனை என்ன என்பது பற்றி விரிவாக படித்து இருப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 131 மற்றும் 132-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்ன அந்த குற்றத்திற்கு எந்த மாதிரியான தண்டனைகள் அளிக்கப்படும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் இந்த சட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்⇒ வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!
IPC Section 131 in Tamil:
இந்திய அரசாங்கத்தின் கீழ் கடற்படை, விமானப்படை அல்லது தரைப்படை போன்ற மூன்று துறைகளில் பணிபுரியும் ஒரு நபர் மற்ற இரண்டு துறைகளில் எதாவது ஒரு துறையில் உள்ள ஒரு நபரை பற்றி மட்டும் பொய்யான கருத்தை குற்றச்சாட்டாக மேல் அதிகாரியிடம் கூறுகிறார்.
இப்போது அவர் கூறிய அந்த கருத்தை மேல் அதிகாரி சோதனை செய்கிறார். அத்தகைய சோதனையின் போது அவர் சொன்ன கருத்து பொய் என்று தெரியும் போது குற்றம் செய்ததாக அவர் கூறிய ஒழுங்கற்ற செயலானது தண்டனை சட்டம் 131-ன் படி குற்றமாகும்.
IPC Section 131-ல் சொல்லப்பட்டுள்ள குற்றத்திற்கு 10 வருடம் வரும் வரை நீட்டிக்கப்பட கூடிய சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் இதற்கான தக்க அபராதமும் தண்டனையுடன் சேர்த்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்.
நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..? |
IPC Section 132 in Tamil:
தண்டனை சட்டம் 131-ல் சொல்லப்பட்டுள்ளது போல இந்திய அரசாங்கத்தின் கீழ் கடற்படை, விமானப்படை அல்லது தரைப்படை போன்ற மூன்று துறைகளில் பணிபுரியும் A என்ற ஒரு நபர் குற்றத்தை செய்து விட்டு அந்த குற்றத்தை B என்ற நபர் செய்ததாக மேல் அதிகாரியிடம் சொன்னாலோ அல்லது A மற்றும் C என்ற இரண்டு நபர்கள் சேர்ந்து செய்த குற்றத்தை B-ன் தான் செய்தார் என்று பொய்யாக மேல் அதிகாரியிடம் கூறுகினாலோ அதற்கான சோதனை நடத்தப்படும்.
சோதனை முடிந்த பிறகு A என்ற நபர் தான் குற்றம் புரிந்தார் என்று தெரியவந்தது என்றால் A என்ற நபருக்கும் அவருக்கு துணையாக இருந்த C என்ற நபருக்கும் சேர்த்து IPC Section 132-ன் படி தண்டனை அளிக்கப்படும்.
தண்டனை சட்டம் 132-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனையும் இதனுடன் சேர்த்து அதற்கான அபராதமும் குற்றவாளிக்கு வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ தண்டனை சட்டம் 125, 126 மற்றும் 127- ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்னென்ன..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |