இந்திய தண்டனை சட்டம்
இந்திய தண்டனை சட்டம் என்பது நிறைய வகையான குற்றங்களை முன்னிறுத்தி அதற்கான தக்க தண்டனையோ அல்லது அபாரதமோ எதாவது ஒன்று குற்றவாளிகளுக்கு அளிக்கபட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அத்தகைய தண்டனைகள் குற்றங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக மாறுபடும். இச்சட்டத்தின் சிறப்புகள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த சட்டங்கள் நிறைய இருந்தாலும் அதில் நாம் தெரிந்துகொண்டது என்னவோ மிகச்சிறியது தான். அதனால் இன்றைய பதவில் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில் 125, 126 மற்றும் 127 ஆகிய மூன்றிலும் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்ன மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!
IPC Section 125 in Tamil:
இந்திய நாட்டின் அரசாங்கத்துடன் இணைக்கத்தில் உள்ள ஒரு நாட்டின் மீது நேரடியாகவோ அல்லது மற்றொரு நாட்டின் உடன் சேர்ந்து மறைமுகமாவோ ஒரு குழு போர் புரிய முயன்றாலோ, போரினை புரிந்தலோ அல்லது வேறு ஒருவரை போர் புரிய தூண்டினாலோ அது IPC Section 125-ன் கீழ் குற்றம் என சொல்லப்படுகிறது.
தண்டனை சட்டம் 125-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு 7 வருடம் சிறைத்தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் குற்றவாளிக்கு வழங்கப்படும். குற்றம் பெரிய அளவில் இருக்கும் போதும் சிறைத்தண்டனை சில நேரத்தில் நீடிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம் |
IPC Section 126 in Tamil:
IPC Section 126-ல் இந்திய நாட்டின் இணக்கத்துடன் உள்ள ஒரு நாட்டின் மீது சில விதிமுறைகளுடன் போர் புரியம் போது அந்த நாட்டில் இருக்கும் பொருட்களை எடுத்தாலோ அல்லது எடுக்க முயன்றாலோ அது குற்றம் ஆகும்.
இந்த குற்றத்திற்காக 7 வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனையும் அதனுடன் சேர்த்து தக்க அபராதமும் அளிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2-யின் விளக்கம் |
IPC Section 127 in Tamil:
126-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்களை யாராவது ஒரு நபர் ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல் மறைமுகவோ எடுத்துவந்தது கடைசியாக தெரிய வந்தால் அது IPC Section 127-ன் படி குற்றமாகும்.
இந்த குற்றத்திற்காக 7 வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு எடுத்து வந்த பொருட்கள் கைப்பற்றப்படும்.
இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |