போலீஸ் அதிகாரியின் கடமைகளுக்கான சட்டங்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

தண்டனை சட்டம் 76 மற்றும் 77-ல் சொல்லப்பட்டுள்ள விளக்கம்

பொதுவாக சிலர் வழக்கறிஞர் படிப்பை படிக்க வேண்டும் அதன் மூலம் நிறைய சட்டங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் சட்டங்களுக்கான படிப்பை படிக்கவில்லை என்றால் என்ன தானாகவே படித்து அதற்கான சட்டங்களை தெரிந்துக்கொள்வோம் என்று நினைத்து படித்து வருவார்கள். இதுமாதிரி நினைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் இரண்டினை மட்டும் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது IPC Section 76 மற்றும் 77 சொல்லப்பட்டுள்ள சட்டங்களை பற்றி விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

IPC Section 76 in Tamil:

அரசு பணியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி வன்மையாக கூட்டம் கூடி தகராறு செய்பவர்கள் மீது தூப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்றாலோ அல்லது வேறு எதவாது குற்றம் புரிந்து இருந்தாலோ அந்த குற்றவாளி மீது தூப்பாக்கி சூடு நடத்தினாலோ அது IPC Section 76 கீழ் குற்றம் என கருதப்படாது.

அதேபோல ஒரு போலீஸ் அதிகாரிக்கு A என்ற நபர் குற்றம் செய்த காரணத்தினால் அவரை கைது செய்வதற்காக உத்தரவு வந்து இருக்கிறது. அப்போது அந்த போலீஸ் அதிகாரி A என்ற நபருக்கு பதிலாக B என்ற நபரை தவறுதலாக கைது செய்தார் என்றால் இந்த இடத்தில் அது குற்றம் இல்லை என்று தண்டனை சட்டம் 76-ன் படி சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்⇒ வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

IPC Section 77 in Tamil:

அரசு அதிகாரத்தில் உள்ள ஒரு நீதிபதி குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனை அளித்தார் எனில் மற்றவர்கள் யாரும் நீதிபதி குற்றவாளிக்கு அளித்த தண்டனையை கடுமையானதாக இருக்கிறது அது தவறு என சொல்லக்கூடாது. ஏனென்றால் அது நீதிபதியின் கடமை என IPC Section 77-ன் படி சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement