வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கலகத்தில் ஈடுபட்டால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Updated On: May 26, 2023 7:49 AM
Follow Us:
IPC Sections 146 to 148 in Tamil
---Advertisement---
Advertisement

IPC Sections 146 to 148 in Tamil

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது. அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 146, 147 மற்றும் 148 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்தினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Sections 146 in Tamil:

ஒரு சட்ட விரோதமான கூட்டம் கூட்டப்பட்டு அந்த கூட்டம் தனது பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வன்முறைச் செயல்களில் ஈடுபடும்பொழுது அந்தக் கூட்டம் கலகம் செய்வதாகக் எடுத்து கொள்ளப்படும்.

இந்த கலகம் செய்வது இந்திய தண்டனை சட்ட பிரிவு 146-ன் படி குற்றமாகும். இப்படி சட்ட விரோதமான கலகம் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 147-ன் படி இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Sections 148 in Tamil:

இந்த சட்ட விரோதமான கலகம் செய்யும் கூட்டத்தில் ஏதேனும் பயங்கரமான ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாக்கக்கூடிய ஆயுதத்தை எவரேனும் வைத்திருந்தால் அது இந்திய தண்டனை சட்ட பிரிவு 148-ன் படி குற்றமாகும்.

இந்த குற்றத்தை புரிபவருக்கு மூன்றுஆண்டுகள் வரை சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய அரசு படை வீரரின் சீருடையை தவறான நோக்கத்தில் அணிந்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now