Chettinad Mutton Chukka Recipe in Tamil
நாம் அனைவருக்குமே உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். அதனால் நாம் அனைவருமே உணவினை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவோம். அதாவது ஒரு சிலர் சைவ பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அசைவ பிரியர்களாக இருப்பார்கள். நாம் எந்தவகை உணவினை பிரியமாக சாப்பிட்டாலும் அதில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ருசியான ஒரு உணவினை சாப்பிடுவதை மிக மிக விரும்புவோம். அதேபோல் அசைவ பிரியர்கள் அனைவருமே மிக மிக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு ரெசிபியினை தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அது என்ன ரெசிபி என்றால் மட்டன் சுக்கா தான். அசைவ பிரியர்கள் அனைவருக்குமே மிக மிக பிடித்த இந்த மட்டன் சுக்காவை செட்டிநாடு முறையில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chettinad Mutton Sukka Recipe in Tamil:
மிகவும் ருசியான செட்டிநாடு மட்டன் சுக்கா செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
அதற்கு முன்பு இந்த செட்டிநாடு மட்டன் சுக்காவுக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மட்டன் – 750 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
- தண்ணீர் – ½ டம்ளர்
- இலவங்கப்பட்டை – 3
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 3
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி விதை – 1 ½ டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 6
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் 750 கிராம் மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ½ டம்ளர் தண்ணீரையும் சேர்த்து லேசாக வேகவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 1 ½ டீஸ்பூன் கொத்தமல்லி விதை, 6 சிவப்பு மிளகாய், 2 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் 2 இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
பிறகு அவற்றையெல்லாம் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 1 இலவங்கப்பட்டை, 1 கொத்து கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் 150 கிராம் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் வேகவைத்திருந்த மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரத்திற்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து நன்கு வெந்த பிறகு அதன் மீது 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி தூவி அனைவருக்கும் பரிமாறுங்கள்.
இப்பொழுது நமது ருசியான செட்டிநாடு மட்டன் சுக்கா ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ருசியான செட்டிநாடு மட்டன் சுக்காவை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
உங்க வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |