Lic Bima Bachat Money Back Policy in Tamil
நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் தினமும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை பற்றி அறிந்து வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் சேமிப்பு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Lic யின் Bima Bachat 916 Policy பாலிசியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தி 8,17,033 ரூபாயை பெற்று கொள்ளலாம். ஓகே வாருங்கள் இந்த திட்டத்தினை பெறுவதற்கான தகுதிகள், கால அளவுகள் போன்றவற்றை விவரமாக இப்பதிவில் பிடித்து தெரிந்து கொள்ளலாம்.
Bima Bachat 916 Policy Details in Tamil:
இந்த பாலிசி பங்குச்சந்தை சாராத Non- Linked பாலிசி ஆகும். இதில் நீங்கள் பாலிசி வாங்கும் போது மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் பணம் செலுத்த தேவையில்லை. இந்த பாலிசி ஒரு Money Back Policy. இதன் மூலம் பாலிசி இடைப்பட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை Money Back-காக பெறலாம்.
LIC -யில் 138 ரூபாய் முதலீடு செய்தால் 13.5 லட்சம் பெறும் சூப்பரான திட்டம் மிஸ் பண்ணிடாதீங்க |
மூன்று விதமான பாலிசி காலங்கள்:
இந்த பாலிசியை 9 வருடங்கள் 12 வருடங்கள் மற்றும் 15 வருடங்கள் கால அளவுகளில் வழங்குகிறார்கள்.
பாலிசி வாங்குவதற்கான வயது தகுதி மற்றும் பாலிசி தொகை:
பாலிசி | குறைந்தபட்ச வயது தகுதி | அதிகபட்ச வயது தகுதி | பாலிசி தொகை |
9 வருடம் | 15 | 50 | 35,000 அல்லது அதற்கு மேல் |
12 வருடம் | 15 | 50 | 50,000 அல்லது அதற்கு மேல் |
15 வருடம் | 15 | 50 | 70,000 அல்லது அதற்கு மேல் |
பாலிசி தொகையை பெறுவதற்கான முதிர்வு காலம்:
- நீங்கள் 9 வருட பாலிசி வாங்கினால் 59 வயதில் தான் பாலிசி தொகையை பெற முடியும்.
- 12 வருட பாலிசி வாங்கினால் 62 வயதில் தான் பாலிசி தொகையை பெற முடியும்.
- 15 வருட பாலிசி வாங்கினால் 65 வயதில் பாலிசி தொகையை பெற முடியும்.
பெண்கள் Rs. 1,500 மட்டும் Lic-யில் செலுத்தினால் போதும் 6,62,500 ரூபாய் பெறக்கூடிய நல்ல திட்டம்..! |
லோன் பெரும் வசதி:
இந்த பாலிசியை வாங்கிய 1 வருடதிற்கு பிறகு லோன் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம்.
இந்த பாலிசியில் 3,67,033 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
Bima Bachat 916 Policy Details in Tamil | |||||
வயது | முதிர்வு காலம் | பிரீமியம் செலுத்திய தொகை | லாயல்டி தொகை | முதிர்வு காலத்தில் கிடைக்கப்பெறும் மொத்த தொகை | Money Back தொகையுடன் கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
25 | 15 வருடம் | 3,67,033 ரூபாய் | 1,50,000 ரூபாய் | 5,17,033 ரூபாய் | 8,17,033 ரூபாய் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |