Gram Sumangal Low Premium High Bonus
பொதுவாக நாம் இப்போது சேமிக்கும் பணம் தான் பின்பு உதவியாக இருக்கும். ஆனால் நாம் யாரும் சேமிப்பது இல்லை. அப்படியே சேமிக்க நினைத்தால் அதனை யாரும் சரியாக சேமிப்பது இல்லை. சேமிப்பது என்றால் வீட்டில் பீரோக்குள் வைத்துகொள்வது அல்ல. நாம் கொஞ்சமாக பணம் சேமித்தால் அது நமக்கு பிற்காலத்தில் இரு மடங்கு பெருகி நல்ல லாபமாக கொடுக்கவேண்டும். ஆகவே அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
Gram Sumangal Low Premium High Bonus:
போஸ்ட் ஆபீஸ் இன்சூரன் பாலிசி பற்றி தான் பார்க்க போகிறோம். போஸ்ட் ஆபீஸ் இரண்டு விதமாக இன்சூரன் பாலிசி உள்ளது. அதில் Gram Sumangal பாலிசி பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தையும், கூடவே Life கவர் பெறலாம். இது ஒரு மணிபேக் பாலிசி.
இந்த பாலிசியின் இடையில் மணிபேக் வழங்குவார்கள். இந்த பாலிசியை இரண்டு விதமான வகையில் முதலீடு செய்யலாம்.
ஒன்று 15 வருட கால அளவு மற்றொன்று 20 வருட கால அளவுகளில் முதலீடு செய்யலாம்.
தகுதி:
நீங்கள் 15 வருடத்தை பாலிசியாக எடுத்தால் அதற்கு வயது தகுதி 19 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.
அதேபோல் 20 வருடத்தை பாலிசியாக எடுத்தால் அதற்கு வயது தகுதி 19 முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
எவ்வளவு முதலீடு:
குறைந்தபட்சமாக 10,000 முதல் 10 லட்சம் வரை இந்த பாலிசியை வாங்கிக் கொள்ளலாம்.
போனஸ் ரேட்:
நீங்கள் எவ்வளவு தொகை வாங்குகிறீர்களோ அந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு ஒவ்வொரு வருடமும் 45 ரூபாய் போனஸ் ரேட் வழங்குகிறார்கள்.
மணி பேக்:
இந்த பாலிசி ஒரு மணி பேக் பாலிசி ஆகும். ஆகவே இந்த பாலிசி இடைப்பட்ட காலத்தில் மணி பேக் வழங்குவார்கள்.
உதாரணமாக 15 வருட பாலிசி வாங்கினால் பாலிசியுடைய 6 வருடம், 9 வருடம், 12 வருடம் என மணி பேக் தொகையை வழங்குவார்கள்.
இந்த பாலிசியில் நீங்கள் மாதம் மாதம், 6 மாதம், 9 மாதம், வருடம் என்று செலுத்தலாம்.
இந்த பாலிசியை எடுத்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
நீங்கள் 5 லட்சம் தொகையை 20 வருட பாலிசியாக வாங்கினால் எவ்வளவு லாபம்.
மாதம் பிரிமியம் ரூபாய் 2475, மொத்த பிரிமியம் தொகை 5,94,000.
போனஸ் ரேட் வருடத்திற்கு 22,500 ரூபாய் மொத்த பிரிமியம் தொகை 4,50,000/-
மொத்தமாக மணி பேக் 3,00,000 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இது அனைத்தையும் சேர்த்து 6,50,000 ரூபாய் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்👇 👇
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |