தினமும் 100 ரூபாய் சேமித்தால் 10,00,000 ரூபாய் வரை லாபம் தரும் அருமையான திட்டம்..!

PPF Scheme Details in Tamil

PPF Scheme Details in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் சீராக நடத்தி செல்வது என்பது நமக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் பொருளாதார ஏற்ற இறக்கம் மேலும் அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதனால் அனைவருமே தங்களின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும்.

நம்மில் சிலருக்கு தனது எதிர்காலத்திற்காக பணத்தை  சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் எந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்தால் நமக்கு சரியான மற்றும் அதிக முதிர்வு தொகை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்வதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் PPF Scheme பற்றிய தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

PPF Scheme in Tamil:

PPF (Public Provident Fund) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமாகும். நிரந்தர வேலை செய்பவர்களுக்கு எப்படி PF போன்ற திட்டங்கள் உள்ளதோ அதே போல் தனிநபர்கள் பயன் பெற இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை கொண்டுள்ளது.

இதில் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இந்திய அரசால் வட்டி தொகை நம் கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தனி நபர்கள் அனைவரும் சேமிப்புகள் செய்ய உதவுகிறது.

PPF கணக்குகளை தபால் நிலையங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் முக்கிய தனியார் வங்கிகள் ஆகியவற்றிலும் திறக்கலாம்.

தகுதிகள்:

ஒருவர் இந்த PPF கணக்கினை திறப்பதற்கு அவர் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.

இந்த PPF Account-யை திறக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 18 வயதிற்கு குறைவானவர்களும் இத்திட்டத்தில் இணையலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்

18 வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு Minor Account கூட திறந்து கொள்ளலாம்.

நன்மைகள்:

இது அரசு ஆதரவு திட்டமாகும் அதனால் செய்யும் முதலீடு மற்றும் வட்டிக்கு பாதுகாப்பு உண்டு.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டிற்கு 1.5 லட்சம் வரிவிலக்கு உண்டு.

PPF கணக்கிற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. அதனால் பொதுவாக வங்கி சேமிப்பிற்கு வழங்கப்படும் வட்டியை விட இதில் அதிகமான வட்டி கிடைக்கிறது.

இந்த திட்டம் ஒரு நீண்ட கால திட்டமாகும். 15 ஆண்டுகள் முதலீடுகள் செய்ய வேண்டும்.

மேலும் இதில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் கணக்கினை முடிக்க விரும்பினால் முடித்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> மிஸ் பண்ணீடாதீங்க 400 நாட்களில் 50,000-திற்கு மேல் வட்டி கிடைக்கும் அருமையான இரண்டு திட்டங்கள்

மேலும் இடைப்பட்ட காலங்களில் நீங்கள் உங்களுக்கு தேவையான பணத்தை Withdrawal செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் நாமினியாக நியமனம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை நியமனம் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

திட்டத்திற்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிதி அமைச்சகத்தால் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது இந்த PPF திட்டத்தில் உங்களுக்கு 7.10% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகின்றது.

லாபம்:

இந்த திட்டத்தில் ஒருவர் மாதம் 3,000 ரூபாய் சேமிக்கிறார் என்றால் அவருக்கு 15 ஆண்டுகள் முடிவில் அவர் செலுத்திய மொத்த தொகையாக  5,40,000 ரூபாய் கிடைக்கும்.  மேலும் அவருக்கு வட்டியாக 4,06,704 ரூபாய் கிடைக்கும். இந்த இரண்டு தொகையையும் சேர்த்து மொத்தம் 9,46,704 ரூபாய் கிடைக்கும்.  

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil