NSC Vs TD இந்த இரண்டு போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் எது சிறந்தது..? நாம் எதில் முதலீடு செய்தால் நல்லது..!

Advertisement

NSC Vs TD Post Office Scheme

நாம் பொதுவாக நமது குழந்தைகள் அல்லது நமது பெயரில் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் முதலீடு செய்து சேமிக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் முதலீடு செய்வது அரசு சார்ந்த நிறுவனகமாக இருந்தால் நல்லது என்று பெரும்பாலான நபர்கள் நினைப்பது வழக்கமான ஒன்று. அதில் அதிகமான நபர்களுக்கு முதலில் தோன்றுவது என்றால் அது  போஸ்ட் ஆபிஸ் தான். ஏனென்றால் போஸ்ட் ஆபிஸில் நிறைய வகையான திட்டங்கள் மக்களுக்கு ஏற்றவாறு புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கிறது. இப்படி வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது என்று நாம் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்று நீங்கள் நினைக்க கூடாது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் உள்ள NSC Vs TD இந்த இரண்டு திட்டத்தில் எதில் சிறந்தது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

Which is Better NSC or TD in Post Office Scheme:

National Savings Certificates Post Office Scheme Time Deposit Post Office Scheme
முதலீடு தொகை இந்த திட்டத்த்தில் ஆரம்ப முதலீடு தொகை ரூபாய் 1,000  TD திட்டத்தில் முதலீட்டிற்கான ஆரம்ப தொகை ரூபாய் 1,000
திட்டம் முடிவடையும் காலம் NSC திட்டமானது 5 வருடம் வரை தொடர்ந்து அதன் பிறகு முடிவடையும். இந்த திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 வருடம். இந்த நான்கில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்% வட்டி விகிதமானது 7.0%. ஆனால் இதில் இடையில் வட்டி தொகை வழங்கப்படாது. வட்டி விகிதம் 7.0%. இதில் மாதம் மாதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.
Pre Mature Clousure NSC திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்து சேமிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் இடையில் உங்களுடைய கணக்கை முடித்து பணம் பெற முடியாது.  TD திட்டத்தின் கீழ் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென கணக்கை முடித்து உங்களுடைய பணத்தை பெற்று கொள்ளலாம்.
Loan இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் எந்த வித Loan-ம் பெற முடியாது. Loan எதுவும் இந்த திட்டத்தின் அடிப்படையில் போஸ்ட் ஆபிஸில் பெற முடியாது.
Deduction உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து எந்த விதமான கழிப்பு தொகையும் பிடிக்க படாது. இந்த திட்டத்திலும் எந்த விதமான கழிப்பு தொகையும் பிடிக்காமல் சேமிப்பு தொகை சரியாக வந்துவிடும்.

 

NSC திட்டத்தில் ஆண்டு முடிவிற்கான தொகை:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் நீங்கள் தோராயமாக 1,00,000 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடம் கழித்த பிறகு 7.0% வட்டி விகிதத்தின் படி 1,40,255 ரூபாய் உங்களுக்கான தொகையாக கிடைக்கும்.

TD திட்டத்தில் ஆண்டு முடிவிற்கான தொகை:

TD திட்டத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் தோராயமாக 1,00,000 ரூபாய் முதலீட்டில் 5 வருடத்திற்கான முதலீட்டை தேர்வு செய்து சேமிக்க தொடங்குகிறீர்கள் என்றால் மாதம் 7,185 ரூபாய் வட்டி தொகை உங்களுக்கு கிடைக்கும்.

வட்டி தொகை போக உங்களுக்கு 1,35,927 ரூபாய் சேமிப்பு தொகையாக கிடைக்கும்.

ஆகவே உங்களுக்கு இடையில் எந்த வித வட்டி தொகையும் வேண்டாம் கடைசியாக எனக்கான சேமிப்பு தொகை மட்டும் போதும் என்றால் உங்களுக்கு National Savings Certificates Post Office Scheme சிறந்ததாக இருக்கும். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்களுக்கு 1000 ரூபாய் முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் அருமையான 3 சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement