Interesting Facts about Stars in Space in Tamil
வணக்கம் நண்பர்களே..! நமது சூரிய குடும்பம் பல ஆச்சரியங்களையும், விநோதங்களை தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நமது சூரிய குடும்பத்தில் உள்ள விநோதங்களில் ஒன்று தான் இந்த நட்சத்திரங்கள். இவற்றை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
ஆம் நண்பர்களே நட்சத்திரங்கள் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரசியமான விஷயங்களை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வால் நட்சத்திரம் பற்றிய சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வால் நட்சத்திரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
Facts about Stars in Tamil:
நாம் அனைவருக்குமே இரவில் வரும் நட்சத்திரங்களை கண்டு ரசிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நாம் ரசிக்கும் நட்சத்திரத்தை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி.?அதனால் தான் இங்கு நட்சத்திரங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம் வாங்க.
இதுவரை வானியலாளர்கள் 12 வகையான நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் குழு நட்சத்திரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் 11 வகையான நட்சத்திரங்கள் O, B, A, F, G, K, M, R, N, T, Y மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
பொதுவாக நட்சத்திரங்கள் அவற்றின் வெப்பநிலை, நிறம் மற்றும் பிரகாசத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக R, N, T மற்றும் Y நட்சத்திரங்கள் O மற்றும் B நட்சத்திரங்களை விட குளிர்ச்சியானவை.
சூரியனும் ஒரு நட்சத்திரம் என்று நமக்கு தெரியும். ஆனால் மற்ற அனைத்து நட்சத்திரங்களும் சூரியனை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் அதனை பற்றி உங்களுக்கு தெரியுமா
பெரும்பாலான நட்சத்திரங்கள் குழுவாக தான் பயணிக்கின்றன. இப்படி கூட்டமாக பயணிக்கும் நட்சத்திரங்களை பைனரி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான சிறிய நட்சத்திரங்கள் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களை விட நீண்ட காலம் வாழ்கின்றன.
நமது பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் இருப்பது உண்மை தான். ஆனால் சுமார் 2,000 நட்சத்திரங்களை மட்டுமே காண முடியும். இதற்கு காரணம் பல நட்சத்திரங்கள் மிக மிக தொலைவில் உள்ளன மற்றும் அவற்றுக்கு போதுமான பிரகாசமும் இல்லை.
பொதுவாக நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. நீங்கள் உடனடியாக கேட்பீர்கள் நாம் வானில் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது மின்னுகின்றன என்று. ஆம் நண்பர்களே இதற்கு காரணம் நமது பூமியின் வளிமண்டலம் தான். அவை தான் நட்சத்திரங்களின் ஒளியை பல்வேறு அடுக்குகளாக பிரிக்கின்றன. அதனால் தான் அவை மின்னுவது போன்ற மாயை ஏற்படுகிறது.
சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம் என்றால் நீங்கள் நம்புவீர்களா. ஆம் நண்பர்களே பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களை விட இது சிறியது ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |